மார்ச் 4 முதல் உலகத் தமிழர்கள் ஜெனீவா ஐ.நா. கட்டிடத்தின் முன் பல நாடுகளிலிருந்தும் திரண்டு வந்து இனப்படுகொலைக்கு நீதி கேட்டு, இனப்படுகொலையாளர்கள் ராஜபக்சே கும்பலைத் தண்டிக்கக் கோரியும், தமிழீழம் அமைய வாக்கெடுப்புக் கோரியும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த எழுச்சிமிகு போராட்டக் காட்சியானது 1917-ல் மாஸ்கோவைக் குலுக்கிய செங்கொடியேந்திய புரட்சியாளர்களின் எழுச்சி போலவும், 1949-ல் சீனத்தை சிவப்பாக்கிய மாவோவின் மக்கள் வெள்ளத்தைப் போலவும் உள்ளது. மாஸ்கோவிலும், பீஜீங்கிலும் வெற்றி கிடைத்ததைப் போல ஜெனீவாவில் தமிழர்களுக்கு வெற்றி கிடைக்குமா? இந்த போராட்ட எழுச்சி வெற்றிப் பாதையைத் திறக்குமா?
Leave a Reply