இலங்கை விவகாரம் தொடர்பிலான உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் விரைவில் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான உத்தியோகபூர்வ நிலைப்பாடு விரைவில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பான் கீ மூனின் ஊடகப் பிரதிநிதி, நேற்றைய தினம் இதனை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களை இலங்கை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எஞ்சிய சவால்களை வெற்றிகரமாக எதிர்நோக்குவதற்கு அரசாங்கம் கூடுதல் முனைப்புடன் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.