யாழில் நேற்று இன்றைய நிலைமை எரிபொருள் விநியோகம் இன்று மாலைக்குள் வழமைக்கு…
திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு வழங்கியமை உள்ளிட்ட ஒருசில விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்துஇ பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் நேற்று 24.04.2017 அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.
நேற்று 24.04.207 பிற்பகல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்இ அலறி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்தே குறித்த முடிவுக்கு வந்ததாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில்இ பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக சங்கம் தெரிவித்திருந்தது
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று பிற்பகல் அளவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு நிறைவு செய்யப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஷெஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் 12 மணியளவில் நூற்றுக்கு 80 சதவீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என மற்றுமொரு செய்திச் சேவைக்கு அவர் தெரிவித்திருந்தார்.
தற்போதைய நிலையில் கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல எண்ணெய் களஞ்சியசாலைகளில் இருந்து சுமார் 100க்கும் அதிகமான பவுஸர்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.









