வல்வை செய்திகள்

இளங்கதிர் உதைபந்து இறுதிப்போட்டி-இளங்கதிர் வெற்றி

வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் அமரர் விஷ்ணுசுந்தரம் ஞாபகார்த்தமாக வல்வைக்குட்பட்ட கழகங்களிடையே மாபெரும் 9 நபர் கொண்ட ஒருநாள் உதைபந்தாட்ட தொடரினை இன்றைய (25/06/2017) தினம் றெயின்போ மைதானத்தில் நடாத்தியது..அந்த வகையில் இச்சுற்றுத்தொடரின் இறுதியாட்டத்திலே வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் மோதியது.. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த ஆட்டத்திலே ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் எந்தவித கோல்களையும் பதிவு செய்யாத காரணத்தினால் ஆட்டம் சமனிலையில் முடிவடைந்தது.. எனவே வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட தண்ட உதையில் 4-3 என்ற கோல்கணக்கில் இளங்கதிர் அணி வெற்றியீட்டியது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *