சைனிங்ஸ் வைரவிழா மென்பந்தாட்டம் இன்று றெயின்போ வெற்றி பெற்றது 27.07.2017
வல்வை வல்வை குச்சம் சைனிங்ஸ் வைரவிழா மென்பந்தாட்டம் 10 பந்து பரிமாற்றங்களை கொண்ட இன்றைய போட்டி கொம்மந்தரை கழுகள் விளையாட்டுக்கள் மைதானத்தில் மூன்றாம் நாள் போட்டிகள் நடைபெற்றது
இதில் றெயின்போ எதிர் உதயசூரியன் மோதின முதலில் துடுப்பெடுத்து ஆடிய றெயின்போ 7 துடுப்பாட்ட வீரர்களை இழந்து 98 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
பதிலுக்கு துடுப்பெடுத்த உதயசூரியன் 99 பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்கி 10 பந்து பரிமாற்ற முடிவில் 8 துடுப்பாட்ட வீரர்களை இழந்து 77 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமையினால் 21 ஓட்ட வித்தியாசத்தால் றெயின்போ வெற்றி பெற்றது
எதிர் வரும் சனிக்கிழமை மாலை காலிறிதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது