வல்வை றெயின்போ பவளவிழா உதைபந்து சுற்றில் ரேவடி,தீருவில் வி.க வெற்றி
வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் (பவளவிழா) 75ம் ஆண்டு நிறைவு விழா
வல்வை வி.கழகத்திற்குட்பட்ட 06 கழங்களுக்கிடையிலான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
மூன்றாம் நாள் போட்டி வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தின் மைதானத்தில் நடைபெற்றது இன்றைய ஆட்டத்தில் வல்வை சைனிங்ஸ் விளையாாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை ரேவடி விளையாட்டுக்கழகம் மோதியது.
இதில் வல்வை ரேவடி விளையாாட்டுக்கழகம் 1:0 கோல்கணக்கில் வெற்றி பெற்றது.இவ்வாட்ட ஆட்டநாயகனாக வல்வை ரேவடி விளையாட்டு கழகதை சேர்ந்த தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாம் ஆட்டத்தில் தீருவில் எதிர் உதயசூரியன் மோத இருந்தது.உதயசூரியன் சமூகம் தராமையினால் தீருவில் வி.க அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது.
இன்றைய ஆட்டநாயகனாக ரேவடி விளையாட்டு கழகதை சேர்ந்த தமிழரசன் தெரிவு செய்யப்பட்டார்.









