வல்வை செய்திகள்

வல்வை நகராட்சி மன்றத்தால் நடாத்தப்படும் 3ம் வட்டாரத்திற்கான நடமாடும் சேவை (வல்வெட்டித்துறை வடமத்தி, கிழக்கு) வாணி படிப்பகத்தில் நடைபெறவுள்ளது.

வல்வை நகராட்சி மன்றத்தால் நடாத்தப்படும் நடமாடும் சேவை.

நகராட்சி மன்றத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் ஒன்றிணைத்து மக்கள் இலகுவாக சேவைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் தவிசாளர்க.கருணானந்தராசா அவர்களின்,தலைமையின் கீழ் உபதவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் உங்களை நாடி வருகின்றனர்.

3ம் வட்டாரத்திற்கான நடமாடும் சேவை (வல்வெட்டித்துறை வடமத்தி, கிழக்கு)
இடம்:வாணி படிப்பகம்
காலம்:02/10/2018 (செவ்வாய்க்கிழமை)
நேரம்:09:00 AM -03:00 PM

வழங்கப்படும் சேவைகள்

1)ஆதன வரி செலுத்துதல்.
2)ஆதன பெயர் மாற்றம்.
3)காணி உபபிரிவிடல்.
4)கட்டட அனுமதி.
5)வியாபார உரிமங்கள்.
6)வியாபார வரி செலுத்துதல்.
7)நூலகத்திற்கான புதிய அங்கத்தவர்களை இணைத்தலும் புதுப்பித்தலும்.
8)துவிச்சக்கர வண்டிக்கான உரிமம் வழங்குதல்.
9)நாய்களுக்கான உரிமமும் பட்டியும் வழங்குதல்.
10)வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ் வழங்குதல்.
11)நீர்க்குழாய் இணைப்புக்கான வீதிகளை வெட்டுவதற்கான அனுமதி வழங்குதல்.
12)முறைப்பாடுகளை ஏற்றலும் தீர்வு அல்லது தீர்வுக்கான ஆலோசனை வழங்குதலும்.
13)பொதுச் சுகாதாரம் தொடர்பான ஆலோசனை வழங்குதல்.

இந்த நடமாடும் சேவைகளை பெற்று அனைவரையும் பயனடையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வல்வை நகராட்சி மன்றம்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *