நாட்டுப்பற்றாளர் /ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 12 ஆண்டு நினைவு நாள்
நாட்டுப்பற்றாளர் /ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி
அவர்களின் 12 ஆண்டு நினைவு நாள்.
இறுதி யுத்தத்தில் இதே நாளில் தேவிபுரம் பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது, சிறிலங்காப் படைகளின் கண்மூடித்தனமான ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

இன்றோடு பன்னிரண்டு ஆண்டுகள் நீங்கள் இல்லாது முடிந்துவிட்டன அப்பா… அன்று உங்கள் உடலை கொஞ்சிய இந்த படத்தின் குழந்தை இன்று வளர்ந்து பெரியவளாக நிற்கிறேன் அம்மாவின் அரவணைப்பில்….! என்னைப் போல பல குழந்தைகள் தந்தையை இழந்து அதே சிறுவர்களாக இருந்து வளர்ந்து விட்டார்கள் அப்பா…. நாங்கள் வாங்கி வந்த வரமோ தெரியவில்லை தந்தையின் அரவணைப்பில் வாழக்கூடாது என்று சொல்லி கடவுள் இந்த பூமிக்கு அனுப்பினாரோ…. எனக்கு உண்மையில் எதுவும் உங்களைப் பற்றி ஞாபகம் இல்லை அப்பா… ஏனெனில் அன்று நான் இரண்டரை வயது சிறுகுழந்தை ஆனாலும் சத்தியமூர்த்தியின் மகள் சிந்து என்று எல்லாரும் உங்கள் ஊடாக என்னைப் பார்க்கிறார்கள்….. உங்களின் பெயர் சொல்லும் மகளாக நான் இருப்பேன் அதுவரை என்னை என்றும் வழிநடத்துங்கள் அப்பா…..!
சத்தியமூத்தி அவர்களின் மகளின் வரிகள்








