09-04-2009 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு வட்டார ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதியில் வாழும் மக்கள் மீது அன்று சிறிலங்கா படையினர் நடத்திய கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 322 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தார்கள்.
2009 இனவாத அரசின் தமிழர் இன அழிப்பு தொடர்….!

09-04-2009 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு வட்டார ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதியில் வாழும் மக்கள் மீது அன்று சிறிலங்கா படையினர் நடத்திய கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 322 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தார்கள்.
‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிக்குள் அன்று வியாழக்கிழமை காலை 5:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணிவரை கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல்களை மக்களை இலக்கு வைத்து அகோரமாக நடத்தப்பட்டது.
‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிக்குள் உள்ள அம்பலவன்பொக்கணை, இடைக்காடு மற்றும் மாத்தளன் பகுதிகளை நோக்கியே சிறிலங்கா படையினர் இத்தாக்குதல்களை நடத்ததினார்கள்
இதில் 322 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தார்கள் .அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் மட்டும் 212 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
கொல்லப்பட்டவர்களின் உடலங்களை அந்த அந்த இடங்களில் புதைத்து விட்டும் சிலர் கைவிட்டு விட்டும் பாதுகாப்பு இடங்களை நோக்கி சிதறி ஓடினர்கள்.உயிரிழந்த பொதுமக்களின் பெயர் விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
இதே நாள் வன்னியில் வேவ்வேறு இடங்களிலும் இராணுவத்தின் தாக்குதல்களில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அவர்களின் விபரங்கள் கிடைக்கவில்லை .
இதேவேளையில் ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என அனைத்துலக ஊடகங்களுக்கு சிறிலங்கா கூறியிருந்த நிலையில் மீண்டும் இப்பகுதியை நோக்கி அது தாக்குதலை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பதிவு – முள்ளிவாய்க்களும் முற்றத்து மண்ணும் நூலில் இருந்து.
படம்- த. வி.பு. ஊடகப் பிரிவு