வல்வை செய்திகள்

லண்டனில் வசிக்கும் வல்வை மாணவிகளின் சமூக சேவைக்கு வல்வை றோமன் கத்தோலிக்க பாடசாலை சமூகத்தின் நன்றி மடல்(படங்கள் இணைப்பு)

எமது ஊரின் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு,  போட்டோ பிரதி இயந்திரம் வாங்குவதற்கென  

லண்டனில் வசிக்கும் வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு திருமதி வரதராஜ் வாசுகி தம்பதியினரின் மகளான  

செல்வி சர்மிளா வரதராஜ் அவர்களின் முயற்சியில் அவருடன் கல்வி கற்கும் மற்றைய வல்வை மாணவிகள் சிலரும்  சேர்ந்து தங்கள் பாடசாலையான Tooting Burntwood School ல் உள்ள அனைத்து மாணவ,மாணவியர்,மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து £351.65p திரட்டியிருந்தார்கள். அந்தப் பணத் தொகையுடன் மேலதிகமாக

 

தேசத்தின் பாலம் நிறுவனம்–  £200.00 

திரு.பரமகுருசாமி குடும்பம் — £120.00

திரு.ஞானவேல் மோகனகுமார்–£30.00

 

ஆகியோர் £350.00 ஐ அன்பளிப்பு செய்து, நம்பிக்கை ஒளி எனும் தொண்டு நிறுவனம் மூலம் மேற்படி பாடசாலைக்கு இன்று 16/05/2014 காலை 9.00 மணியளவில் நம்பிக்கை ஒளி நிறுவன அங்கத்துவரும், வன்னி பார்வையற்றோர் சங்கத் தலைவருமான திரு.ரூபன் அவர்களினால் .பாடசாலை அதிபர் திருமதி மங்களேஸ்வரி சேதுலிங்கம் அவர்களிடம் வழங்கப்பட்டது

  

இந்த அளப்பரிய சேவையைச் செய்த வல்வை  மாணவிகளுக்கும் ,Burnt WoodSchool நிர்வாகத்தினருக்கும்,மற்றும் ”நம்பிக்கை ஒளி”நிறுவனத்தினருக்கும், அதிபர் திருமதி மங்களேஸ்வரி சேதுலிங்கம் அவர்கள் தமது பாடசாலை சார்பாக நன்றியைத்  தெரிவித்துள்ளார்கள்.

DSC_0902
IMG_2238

IMG_2351

IMG_2412

IMG_2481

IMG_2500

IMG_2548

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *