Monday, October 12, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home தொழிநுட்பம்

இன்டர்நெட்டில் உஷார் தேவை…!

by admin
10/02/2014
in தொழிநுட்பம்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்று நாம் இணையத்தில் இணைந்து, தேவையான தளங்களைச் சுற்றி வந்தாலே போதும், நம்மை பற்றிய அனைத்து பெர்சனல் தகவல்களும் யாருக்காவது சென்று விடும் வகையில் சேர்க்கப்படுகின்றன. எப்படி, எந்த வழிகளில் இவை தேடி எடுக்கப்படுகின்றன என்பது நாம் அறியாமல் இருக்கலாம். ஆனால், இணையம் இயங்கும் வழிகளை ஆய்வு செய்தவர்கள், இந்த வழிகளைக் கண்டறிந்துள்ளனர். இன்றைக்கு கிராமங்களில் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டில் எப்படி அவர்கள் கண்ணில் துணியைப் போட்டு, பின் நம்மைத் துரத்தி விளையாடுகிறார்களோ, அதே போல, நாம் அறியாமல் நமக்குத் தூண்டில் போட்டு, நம்மைப் பற்றிய தகவல்களைப் பெறும் இந்த இணைய விளையாட்டினைப் பற்றி இங்கு பார்க்கலாம். சில வகை தகவல் சேகரிப்பு வெளிப்படையாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, இணைய தளங்களில் நீங்கள் லாக் இன் செய்திடுகையில், நீங்கள் யார் என்பதனை அது அறிந்திருக்கும். ஆனால், உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து, முழுமையான உங்கள் பெர்சனாலிட்டியை அறிந்து கொள்கின்றனர் என்பதுதான் நாம் எண்ணிப் பார்த்து, உஷாராக வேண்டிய ஒன்று. பொதுவாக விளம்பரங்களுக்கான வலைப்பின்னல்களில், விளம்பரங்களைக் குறிவைத்து, உங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவார்கள். ஏதேனும் ஒரு வர்த்தக இணைய தளத்தில் நுழைந்து, வர்த்தகம் குறித்த விளம்பரங்களை, தொடர்பு தரும் இணைய தளங்களில் பார்த்தாலும், நம்மைப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்படும். ஐ.பி. முகவரிகள்: உங்களை விரைவில் எளிதாக அடையாளம் காட்டுவது உங்கள் ஐ.பி. முகவரி தான்.இணையத்தில், உங்கள் ஐ.பி. முகவரி, உங்களை அடையாளம் காட்டுகிறது. இதிலிருந்து, மிகச் சரியான உங்கள் முகவரியை அறிய முடியாது என்றாலும், உத்தேசமாக, பூகோள ரீதியான இடத்தை அறியலாம். உங்களின் தெரு தெரியாவிட்டாலும், நகரம் அல்லது நகரத்தில் ஏரியா தெரிய வரும். இருப்பினும், ஒரே ஐ.பி. முகவரியை உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் பயன்படுத்த முடியும் என்பதால், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தை மட்டும் பிரித்தறிவது எளிதானதல்ல. இருந்தாலும், ஐ.பி. முகவரியை மற்ற தொழில் நுட்பத்துடன் இணைத்து, நம் இடத்தை உறுதிப் படுத்தலாம். எச்.டி.டி.பி. ரெபரர் (HTTP Referrer): நீங்கள் இணையத்தில், லிங்க் ஒன்றைக் கிளிக் செய்தால், உங்கள் பிரவுசர், நீங்கள் கிளிக் செய்த லிங்க் சார்ந்த இணைய தளத்தினைக் கொண்டுவருகிறது. இணையதள சர்வரில், நீங்கள் எங்கிருந்து தொடர்பினை ஏற்படுத்துகிறீர்கள் என்று சொல்கிறது. இந்த தகவல் HTTP referrer headerல் கிடைக்கும். இணையப் பக்கத்தில், அதன் தகவல்களைக் கொண்டு வருகையில், HTTP referrerம் அனுப்பப்படுகிறது. எடுத்துக் காட்டாக, இணைய தளம் ஒன்று விளம்பரத்தைக் கொண்டிருந்தால், ட்ரேக் செய்திடும் ஸ்கிரிப்ட் ஒன்றை வைத்திருந்தால், உங்கள் பிரவுசர், அந்த விளம்பரதாரரிடம் அல்லது பின் தொடரும் நெட்வொர்க்கி டம், நீங்கள் எந்த பக்கங்களைப் பார்க்கிறீர்கள் என்பதனைச் சொல்கிறது. “Web bugs” என்று அழைக்கப்படும் மிகச் சிறிய (1×1 பிக்ஸெல்) கண்ணால் பார்க்க இயலாத இமேஜ்கள் இந்த எச்.டி.டி.பி. ரெபரரைத் தனக்கு உதவியாக எடுத்துக் கொண்டு, இணைய தளத்தில் தன்னைக் காட்டாமலேயே, உங்களைப் பின் தொடரும். இதனையே பயன்படுத்தி, நீங்கள் திறந்து பார்க்கும் மின் அஞ்சல்களையும் இவை தொடர்கின்றன.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

நான்கே மணி நேரத்தில் உலகை சுற்றலாம். ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் விமானம் தயார்

நான்கே மணி நேரத்தில் உலகை சுற்றலாம். ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் விமானம் தயார்

by admin
22/12/2014
0

ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிக வேகம் செல்லும் நவீன ரக விமானம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் மூலம் உலகின் ஒரு மூலையில்...

இயந்திரம் மூலம் நெல் விதைக்கப்படும் தொழிஞட்பம் (காணொளி)

இயந்திரம் மூலம் நெல் விதைக்கப்படும் தொழிஞட்பம் (காணொளி)

by admin
30/11/2014
0

இயந்திரம் மூலம் நெல் விதைக்கப்படும் தொழிஞட்பம் (காணொளி)

தொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய சாதனம்

தொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய சாதனம்

by admin
26/11/2014
0

ரிமோட் கன்ரோலர்களையும் தாண்டி கை அசைவுகளின் மூலம் தொலைக்காட்சிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய புதிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Onecue எனும் இச்சாதனம் மூலம் தொலைக்காட்சிகள் தவிர Cable...

வால்நட்சத்திரத்தில் இறங்கியது பிலே கலன்

by admin
12/11/2014
0

சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக சுமார் 10 ஆண்டுகள் பயணித்த பின்னர், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் , விண்கலன் ரொசெட்டாவின் ஆய்வுக்கலனான, பிலே கலன், வால் நட்சத்திரத்தின்...

குண்டுகளைக் கண்டுபிடிக்கும் கார்பன் நனோ குழாய்கள்

குண்டுகளைக் கண்டுபிடிக்கும் கார்பன் நனோ குழாய்கள்

by admin
12/11/2014
0

நனோ தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி குண்டுகளை கண்டுபிடிக்கும் சாதனத்தை Utah பல்கலைக்கழக பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். விரிவுரையாளர் Ling Zang தலைமையிலான குழுவினால் உருவாக்கப்பட்ட இச்சாதனம் Carbon Nanotubes என...

24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்

24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்

by admin
11/11/2014
0

சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது அப்பதிப்பினை 24 கரட் தங்கத்தினால் ஆன கவருடன் அறிமுகம் செய்துள்ளது....

Next Post

உடல் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப உங்க டயட்-ல பலாப்பழத்தை சேத்துக்கோங்க...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.