Sunday, October 11, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home மருத்துவம்

உட்காராதே… உட்காராதே!

by admin
25/01/2013
in மருத்துவம்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மனிதர்களின் சராசரி தூக்கம் அதிகபட்சம் 7 மணி நேரம். கம்ப்யூட்டர், டி.வி. என எதன் முன்போ அல்லது சும்மாவோ ஒருவர் உட்கார்ந்த நிலையில் செலவிடும் நேரம் எவ்வளவு தெரியுமா? 9:30 மணி நேரம்! அதனால் என்ன என்கிறீர்களா?

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களில் 40 சதவிகிதம் பேர்,3 மணி நேரத்தை விடக் குறைவாக உட்கார்ந் திருப்பவர்களை விட, சில வருடங்கள் முன்னதாகவே உயிரிழக்கிறார்களாம்.

ஐயையோ…! அது மட்டுமா?

பருமனாக இருப்பவர்களைக் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். ஒல்லியாக இருப்பவர்களைவிட, இவர்கள் இரண்டரை மணி நேரம் கூடுதலாக உட்கார்ந்திருப்பது தெரிய வரும். ஒரு சூயிங்கம் மென்றால்கூட உங்கள் உடலின் குறைந்த அளவு கலோரியாவது எரிக்கப்படுமாம். ஆனால், உட்கார்ந்திருப்பதால், ஒரு பயனும் உண்டாவதில்லை!

உட்கார்ந்த உடனேயே உங்கள் கால் தசைகளின் இயக்கம் நின்று போகிறது. கலோரி எரிக்கப்படுவது வெகுவாகக் குறைகிறது. கொழுப்பை உடைத்துக் கரைக்கும் ஒருவித என்சைம் சுரப்பு, ‘மளமள’வென இறங்குகிறது. தொடர்ந்து 2 மணி நேரம் உட்கார்ந்திருக்கும் போது, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறையத் தொடங்குகிறது. உட்கார்ந்திருக்கிற நேரம் அதிகமாக, ஆக இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, நீரிழிவை வரவேற்க ஆயத்தமாகிறது உங்கள் உடல்.

‘‘உடம்பை அசைக்கிற போதுதான், ரத்த ஓட்டம் சீராக இருக்கும். உணவு செரிக்கும். ஒரே இடத்துல ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு இந்த விஷயங்கள் சரியா நடக்காது. அது அடுக்கடுக்கான பிரச்னைகளைக் கொடுக்கும்…’’ எச்சரிக்கிற தொனியில் ஆரம்பிக்கிறார் எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் விவேக்.

‘‘நம்ம உடம்புல நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்புன்னு ரெண்டு இருக்கு. கெட்ட கொழுப்புங்கிறது உணவின் மூலமும், நல்ல கொழுப்பு, உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் மூலமும்தான் கிடைக்கும். 24 மணி நேரத்துல 10 முதல் 12 மணி நேரம் உட்கார்ந்தே இருக்கிறது மூலமா ஆரோக்கியத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அதிகரிக்காமப் போகிற அபாயம் உண்டு. நல்ல கொழுப்பு குறைஞ்சு, கெட்ட கொழுப்பு அதிகமாகிற போது, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தாக்கலாம்.

கழுத்து வலியும் முதுகு வலியும் தவிர்க்க முடியாமப் போகும். முழங்கால் வலி வரும். ஐடி கம்பெனி, பேங்க் மாதிரியான இடங்கள்ல உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துல இருக்கிறவங்களுக்கு இதெல்லாம் சகஜம்.  உட்காரும் போது, நம்மளோட இருக்கைக்கும், டேபிளுக்குமான இடைவெளியும், உயர வித்தியாசமும் சரியா இருக்க வேண்டியது அவசியம். அதாவது டேபிளோட உயரம், முழங்கைகளைவிட ரொம்ப உயரமாகவும் இருக்கக் கூடாது. ரொம்ப தாழ்வாகவும் இருக்கக் கூடாது. நெஞ்சுப்பகுதிக்கு நேரா இருக்கிறதுதான் சரி.

அது மட்டுமில்லாம, முதுகுப் பகுதி வளையாம, நேரா இருக்கிற மாதிரியான இருக்கை அவசியம். முதுகுக்கு சப்போர்ட்டா ‘பேக் ரெஸ்ட்’ உள்ள குஷன் வச்சுக்கிறதும் நல்லது. உட்கார்ந்து வேலை பார்க்கிறதைத் தவிர்க்க முடியாதே… என்ன செய்யன்னு கேட்கறவங்க, ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறையும் 3 முதல் 5 நிமிஷங்கள் எழுந்து நடந்துட்டு வரணும். ஒரு மணி நேரத்துக்கொரு முறை 5 நிமிஷங்களுக்கு கை, கால்களை நீட்டி, மடக்கலாம்.

இதனால முதுகுப் பக்க தசை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். காலையில எழுந்ததும், உடம்பு இறுக்கமா இருக்கிற மாதிரி உணர்ந்தாலோ, அங்கங்கே சதை பிடிப்பு மாதிரி உணர்ந்தாலோ, அலட்சியப்படுத்தாம, மருத்துவரைப் பார்த்து ஆலோசனை எடுத்துக்கிறது நல்லது’’ – அட்வைஸுடன் முடிக்கிறார் டாக்டர்.
இப்படியெல்லாம் பயமுறுத்தினா எப்படி? வேலையிடத்துல பல மணி நேரம் உட்கார்ந்துதானே ஆகணும்? என்கிறீர்களா?

உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டியவர்கள், வேலை நேரத்துக்கு இடையில் கிடைக்கிற நேரங்களில் படத்திலுள்ள பயிற்சிகளைச் செய்து வந்தாலே பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். தவிர சாதாரணமாகவும், வேலை நேரத்தில் கம்ப்யூட்டர் முன்பும் உட்காரும் போது எது சரியான நிலை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்…

Share this on WhatsApp
admin

admin

Related Posts

தொப்பை வேகமாக குறைய எளிய பயிற்சி

by admin
20/04/2017
0

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கவல்ல சௌ சௌ..!

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கவல்ல சௌ சௌ..!

by admin
03/01/2015
0

நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் சௌ சௌவும் ஒன்று. சௌ...

அல்சரும்… உண்மையும்…

அல்சரும்… உண்மையும்…

by admin
02/01/2015
0

நேரத்திற் குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் பெரும்பாலும் சரியான நேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்து...

செரிமான பிரச்சனையா? இதை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க

செரிமான பிரச்சனையா? இதை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க

by admin
30/12/2014
0

தினசரி வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தப்படும் தயிரானது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தயிரில் பல வித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. இதனை தினமும் பயன்படுத்துவது...

அழகு விஷயத்தில் பலரும் செய்யும் தவறுகள்..

அழகு விஷயத்தில் பலரும் செய்யும் தவறுகள்..

by admin
29/12/2014
0

எல்லோருமே தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். சிலருக்கு அதற்கான நல்ல ரசனை இருக்கும். நேரம் இருக்கும். ஆனால், சிலருக்கு நேரம் இருக்காது அல்லது...

வண்ணங்கள் வாழ்க்கையை இருட்டாக்கும்….

வண்ணங்கள் வாழ்க்கையை இருட்டாக்கும்….

by admin
13/12/2014
0

வீட்டில் அடிக்கடி செய்யும் இனிப்பு பண்டம் என்றால் அது கேசரியாகவோ, பாயசமாகவோ தான் இருக்கும். கேசரியில் சேர்க்கப்படும், முந்திரிப் பருப்பு, திராட்சை போன்ற பொருட்களில் சுவையும், சத்தும்...

Next Post

வல்வெட்டி சித்தி விநாயகர் கும்பாபிஷேக புகைப்படங்கள்-24-01-2013.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.