Wednesday, October 14, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home தொழிநுட்பம்

கணினியை எதற்கு Backup செய்ய வேண்டும்?

by admin
17/02/2013
in தொழிநுட்பம்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ கணினியைப் பயன்படுத்தும் போது முக்கிய பைல்களைப் பிரதி செய்து வேறொரு ஊடகத்தில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்திக் கொள்வதை (Backup) பேக்கப் எனப்படும். எதிர்பராத விதமாக கணினி செயலிழக்கும்போது தகவல் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பைல்களை பேக்கப் செய்து கொள்வதும் அதனை அவ்வப்போது புதுப்பித்துக் (update) கொள்வதும் அவசியம். முக்கிய பைல்களை பேக்கப் செய்து வைத்திருந்தால் அதிலிருந்து பைல்களை மீளப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது.

கணினியை ஏன் பேக்கப் செய்ய வேண்டும் என்பதற்ககான சில காரணங்களைப் பார்க்கலாம்.

முக்கிய ஆவணங்கள் மற்றும் பைல்களை ஹாட் டிஸ்கில் சேமித்து வைப்பதே சௌகரியமாது என அனேகமான கணினிப் பயனர் கருதுகின்றனர். தேவை ஏற்படின் ஆவணங்களை இலகுவாக அச்சிட்டுக் கொள்ளவும். அவற்றில் மாற்றங்கள் செய்து புதுப்பித்துக் கொள்ளவும் முடியும் எனப் பலரும் கருதுவதால் ஹாட் டிஸ்கிலேயே அவற்றை சேமித்து வைப்பர். ஹாட் டிஸ்கில் பைல்களை சேமித்து வைப்பது உண்மையிலேயே சௌகரியமானதுதான்.

எனினும் அது பாதுகாப்பான வழிமுறையல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். காகித ஆவணங்களைப் போலவே கணினியிலுள்ள பைல்களின் பிரதியொண்றை வேறோரு ஊடகத்தில் களஞ்சியப்படுத்தி வைப்பதே சிறந்த வழி முறையாகும்.

ஹாட் டிஸ்க் ஏதோ ஒரு காரணத்தால் பழுதடையும் போது அதில் சேமிக்கப்பட்டுள்ள பைல்களுக்கும் உத்தரவாதம் கிடைக்காமல் போகும்.. நமது பைல்களைக் கணினி காண்பிக்காது விடும். சில வேளை அவற்றைத் திறந்து பார்க்க முடியாமலிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த பைகளின் பேக்கப் பிரதியொன்று இருக்குமானால் அதனை வேறொரு கணினியில் ஏற்றியோ அல்லது ஹாட் டிஸ்கை மாற்றிக் கணினியை சரி செய்த பிறகோ பயன்படுத்தக் கூடியதாயிருக்கும். எனினும் பேக்-அப் பிரதி இல்லையெனின் அவற்றை நிரந்தரமாகவே இழக்க நேரிடும் அல்லது. . அதிக நேரத்தைச் செலவிட்டு அந்த ஆவணங்களை மறுபடியும் உருவாக்க வேண்டியிருக்கும்

டெஸ்க்டொப் கணினியை நீங்கள் செல்லுமிடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. எனவே முக்கியமான பைல்களை ஒரு சீடியிலோ அல்லது பென்ட்ரைவிலோ பேக்கப் செய்து விட்டால் அதன நீங்கள் செல்லுமிடத்திள்ள ஒரு கணினியில் இட்டுப் பயன்படுத்தலாம். இதனை பேக்கப செய்வதனால் பெறக் கூடிய மற்றொரு பயனாகக் கொள்ளலாம்.

ஒரு ரீமோட் சேர்வரின் உதவியுடன் இணையத்திலும் பைல்களையோ அவற்றை இயக்கக கூடிய மென்பொருள்களையோ பேக்கப் செய்து வைக்க லாம். இதனை ஓன்லைன் பேக்கப் என்பர். இணையத்தில் இவ்வாறான சேவை வழங்கும் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. சில நிறுவனங்கள் இந்த சேவையை இலவசமாகவும் சில சிறிய தொகையை கட்டணமாகப் பெற்றும் வழங்குகின்றன. ஓன்லைன் பேக்கப் மூலம் நீங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் உங்கள் பைல்களை அணுக முடியும்.

கணினியை குறிப்பிட்ட கால இடை வெளியில் பேக்கப் செய்து கொள்ள வேண்டும். பேக்கப் செய்ய மறந்து விடுமானால் பேக் அப் செய்யும் செயற்பாட்டை நீங்கள் குறிப்பிடும் கால இடை வெளியில் விண்டோஸ் தானாகவே பேக்கப் செய்வதற்கும் வசதியுள்ளது.. குறைந்தது மாதமொருமுறையேனும் பேக்கப் செய்து கொள்வது சிறந்த நடை முறையெனப் பரிந்துரைக்கப்படுகிறது எனினும் உங்கள் கணினியில் தினசரி டேட்டா சேக்கப்படுமாயின் வாரமொரு முறையேனும் பேக்கப் செய்து கொள்ளல் நல்லது.

இவ்வாறு பேக்கப் செய்து கொண்டால் ஹாட் டிஸ்கில் பாதிப்பு ஏற்படினும் தகவல், இழப்பைக் குறைத்துக் கொள்ள முடிவதோடு குறைந்த நேரத்திலேயே அதனை மீட்டுக் கொள்ளவும் முடியும்.
விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பில் பேக்கப் செய்வதற்கான யூட்டிலிட்டியும் இணைந்து வருகிறது. எந்த பைல்களை பேக்கப் செய்ய வேண்டும், பேக்கப் செய்த பைல்களை எந்த ஊடகத்தில் சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானித்த் பிறகு பின்வரும் வழிகளில் பேக்கப் செய்ய ஆரம்பிக்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் Start →Programs →Accessories →System Tools ஊடாக Backup தெரிவு செய்யுங்கள். அப்போது Backup and Restore விசர்ட் தோன்றும். அங்கு வரும் மூன்றாவது கட்டத்தில் நான்கு தெரிவுகள் உள்ளன.

All information on this computer என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் கணினியிலுள்ள அனைத்து பைல்களையும் பேக்கப் செய்யலாம். எனினும் இதற்கு அதிக கொள்ளளவு கொண்ட ஒரு ஊடகம் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

My documents and settings என்பதைத் தெரிவு செய்வது சிறந்த தெரிவாகும். பயனர் கணக்குக்குரிய மை டொகுயுமண்ட்ஸ் போல்டரானது, அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மூலம் பெற்ற மின்னஞ்சல்கள், இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர் பயன்படுத்திய குக்கீஸ் மற்றும் விருப்பமான இணைய
தளங்களின் பட்டியல் என்பவற்றுடன் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி செட்டிங்ஸ் என்பவற்றைக் கொண்டிருக்கும். பேக்கப் செய்ய வேண்டிய பைல்கள் கணினியில் வேறொரிடத்தில் இருப்பின் அவற்றையும் மை டொகுயுமண்ட்ஸ் போல்டருக்கே நகர்த்திக் கொள்வது பேக் அப் செயற்பாட்டை இலகு படுத்தும்
.

ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் Everyone’s documents and settings என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் அனைத்து பயனர் கணக்குகளுக்குரிய ஆவணங்கள் மற்றும் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி செட்டிங்ஸ் அனைத்தும் பேக்கப் செய்யப்படும்.

உங்கள் ஆவணங்கள் மைடொகுயுமெண்ட்ஸ் போல்டருக்கு வெளியே வேறொரு இடத்தில் சேமிக்கப்பட்டிருப்பின், Let me choose what to back up
என்பதைத் தெரிவு செய்ய வேண்டும். இதனைத் தெரிவு செய்வதன் மூலம் உங்களுக்கு பேக் அப் செய்ய அவசியமற்ற பைல்களைக் நீக்க முடியும்.

பேக்கப் செய்யும் பைல்களை எந்த ஊடகத்தில் சேமிப்பது என்பதை விண்டோஸ் அடுத்து வினவும். மெக்னடிக் டேப் எனும் காந்த நாடா, ப்லொப்பி டிஸ்க், சிப் டிஸ்க், ஹாட் டிஸ்க், சீடி, டீவிடி, பென் ட்ரைவ் என எவற்றிலும் சேமித்துக் கொள்ளலாம். உங்கள் கணினி ஒரு வலையமைப்பிலிருந்தால் வெறொரு கணினியிலும் கூட சேமித்துக் கொள்ளலாம். ஹாட் டிஸ்கில் பேக்கப் செய்கையில் C – ட்ரைவ் அல்லாத வேறொரு பாட்டிசனில் பேக்கப் செய்தல் நல்லது.

பேக்கப் செய்ததும் அனைத்து பைல்களும் ஒரே பைலாக சேமிக்கப்படும். பேக்கப் பைல் . bkf என்ற பைல் நீட்டிப்பைக் கொண்டிருக்கும். ஒரு பேக்கப் பைலைப் பயன்படுத்த முன்னர் ஒரு (Zip) சிப் பைலை (extract) விரித்துக் கொள்வது போல் அதனை ரீஸ்டோர் (restore) செய்து கொள்ள வேண்டும்..

விண்டோஸ் விஸ்டா பதிப்பபில் பேக்க்ப் செய்வதற்கு Backup and Restore Center ஐ அணுக வேண்டும் அதற்கு கண்ட்ரோல் பேனலில் System and Maintenance தெரிவு செய்யுங்கள். அங்கு Backup your computer. தெரிவு செய்யுங்கள். அங்கு Backup files, தெரிவு செய்வதன் மூலம் உங்களுக்குத் தேவையான பைல்களை பேக்கப் செய்யலாம்

Share this on WhatsApp
admin

admin

Related Posts

நான்கே மணி நேரத்தில் உலகை சுற்றலாம். ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் விமானம் தயார்

நான்கே மணி நேரத்தில் உலகை சுற்றலாம். ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் விமானம் தயார்

by admin
22/12/2014
0

ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிக வேகம் செல்லும் நவீன ரக விமானம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் மூலம் உலகின் ஒரு மூலையில்...

இயந்திரம் மூலம் நெல் விதைக்கப்படும் தொழிஞட்பம் (காணொளி)

இயந்திரம் மூலம் நெல் விதைக்கப்படும் தொழிஞட்பம் (காணொளி)

by admin
30/11/2014
0

இயந்திரம் மூலம் நெல் விதைக்கப்படும் தொழிஞட்பம் (காணொளி)

தொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய சாதனம்

தொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய சாதனம்

by admin
26/11/2014
0

ரிமோட் கன்ரோலர்களையும் தாண்டி கை அசைவுகளின் மூலம் தொலைக்காட்சிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய புதிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Onecue எனும் இச்சாதனம் மூலம் தொலைக்காட்சிகள் தவிர Cable...

வால்நட்சத்திரத்தில் இறங்கியது பிலே கலன்

by admin
12/11/2014
0

சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக சுமார் 10 ஆண்டுகள் பயணித்த பின்னர், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் , விண்கலன் ரொசெட்டாவின் ஆய்வுக்கலனான, பிலே கலன், வால் நட்சத்திரத்தின்...

குண்டுகளைக் கண்டுபிடிக்கும் கார்பன் நனோ குழாய்கள்

குண்டுகளைக் கண்டுபிடிக்கும் கார்பன் நனோ குழாய்கள்

by admin
12/11/2014
0

நனோ தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி குண்டுகளை கண்டுபிடிக்கும் சாதனத்தை Utah பல்கலைக்கழக பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். விரிவுரையாளர் Ling Zang தலைமையிலான குழுவினால் உருவாக்கப்பட்ட இச்சாதனம் Carbon Nanotubes என...

24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்

24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்

by admin
11/11/2014
0

சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது அப்பதிப்பினை 24 கரட் தங்கத்தினால் ஆன கவருடன் அறிமுகம் செய்துள்ளது....

Next Post
Lava அறிமுகப்படுத்தும் XOLO A1000 கைப்பேசிகள்

Lava அறிமுகப்படுத்தும் XOLO A1000 கைப்பேசிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.