Friday, August 28, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home தாயக செய்திகள்

கிட்டுப் பூங்காவை நோக்கிப் படையெடுக்கும் யாழ் மக்கள்!

by admin
01/10/2016
in தாயக செய்திகள்
0
கிட்டுப் பூங்காவை நோக்கிப் படையெடுக்கும் யாழ் மக்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புனர்வாழ்வு அதிகாரசபை நடாத்தும் சுயதொழில் கடன் திட்டத்தின் ஊடான உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நல்லூர் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்று வருகின்றது.

இன்று 30.09.2016 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய இக்கண்காட்சி நாளை 01.10.2016 சனிக்கிழமை இரவு 7 மணிவரைக்கும் இடம்பெறும்.

இந்தக்கண்காட்சியில் கிராமமட்ட உள்ளூர் உற்பத்திக் குழுக்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களால் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான உணவுப் பண்டங்கள், கிருமிநாசினி வகைகள், ஆடைகள், தெங்குசார் உற்பத்திக்குப் பொருட்கள், பனை சார் உற்பத்திப்பொருட்கள், பழ மரக் கன்றுகள், மெழுகாலான அழகு சாதனப்பொருட்கள், காளான்- கற்றாழை மூலிகை பானங்கள் ஆகியவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்வதனை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களே சுயதொழில் உற்பத்தியிலும், கண்டுபிடிப்புகளிலும் சாதித்து வருவதனை நேரில் காணக்கூடியதாக இருந்தது.

மூலிகை உணவுற்பத்தி கண்டுபிடிப்பில் ஜனாதிபதி விருது பெற்ற சாய்ராணி

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்ததிருமதி சாய்ராணி என்கிற சுய தொழில் முயற்சியாளர் குறிஞ்சா மற்றும் வல்லாரை சத்துமா-புட்டுமா, வல்லாரை- குறிஞ்சா அப்பளம், ஆகியவற்றை புதிதாக தயாரித்து கடந்த 2013 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில்இரண்டாம் இடத்தை பெற்று ஜனாதிபதியிடம்விருது பெற்று சாதித்துள்ளார்.

உண்மையில் வல்லாரை, குறிஞ்சா சத்துமா குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிக உகந்தது மட்டும்அல்லாமல் சலரோகம், பிரஷர் நோயாளிகளின் உடல்ஆரோக்கியத்துக்கும் சிறந்த உணவாகும்.

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் இளைஞரான அல்லைப்பிட்டி மகேஸ்வரநாதன் கிரிசன்

இன்றைய காலப் பகுதியில் இளைஞர்கள் எல்லோரும் விவசாயத்தை கண்டு கொள்ளாமல் இருக்கும் சமயத்தில் இயற்கை விவசாயத்தில் சாதித்து வருகிறார் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த மகேஸ்வரநாதன் கிரிசன் என்கிற இளைஞர்.

இயற்கை விவசாயத்துக்கு பல்வேறு இயற்கையான கிருமிநாசினிகளை தயாரிக்கும் இவர் தன்னிடம் உள்ள குறுகிய நிலப்பரப்பில் இயற்கையான முறையில் விவசாயம் செய்து வருவதோடு கால்நடைகளும் வளர்த்து வருகிறார்.

செயற்கைபீட நாசினிகளால் மரக்கறிகள் நஞ்சாவதால் புற்றுநோய்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகளில் நிரூபணமான நிலையில் இவரது இயற்கை விவசாயம் மூலமான விவசாய உற்பத்திப் பொருட்கள் மக்களால் அதிகம் நுகரப்பட வேண்டும்.

தான் இயற்கை விவசாயம் மூலம்உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக இவர் கூறுகிறார்.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

மருதனார்மடம்-யாழ் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது.

மருதனார்மடம்-யாழ் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது.

by admin
04/10/2023
0

மருதனார்மடம்-யாழ் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது. இப் போராட்டமானது முல்லைத் தீவு நீதிபதியான ரீ.சரவணராஜாவுக்கு குருந்தூர் மலை தீர்ப்பை இட்டு தொடர் அழுத்தங்கள் காரணமாக அவர் நாட்டை...

வல்வெட்டித்துறை ஆதிகோவில் மக்களால் அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனுடைய 36-வது ஆண்டு நினைவு தினம் 26.09.2023

வல்வெட்டித்துறை ஆதிகோவில் மக்களால் அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனுடைய 36-வது ஆண்டு நினைவு தினம் 26.09.2023

by admin
04/10/2023
0

https://youtu.be/MXO766p0xr8?si=hLCCzbqPdxYr5iN8

கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023

கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023

by admin
04/10/2023
0

கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023 https://youtu.be/jSiLg2io06o?si=w-wY0XCuBjn237wv

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023

by admin
04/10/2023
0

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023 நல்லூரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய...

குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் … தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வு பெரும் திரளான மாவீரர் உறவுகளின் கண்ணீர்களுடன் உணர்வுபூர்வமாக  இன்றைய தினம்(27-11-2022 ) நடைபெற்றது

27/11/2022
0

குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் … தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வுபெரும் திரளான மாவீரர்...

இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 )   எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன்   குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை-(காணொளி இணைப்பு)

இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 ) எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன் குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை-(காணொளி இணைப்பு)

by admin
27/11/2022
0

இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 ) எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன் குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை

Next Post
நேற்று வல்வை ரேவடி விளையாட்டு கழக கடற்கரை மைதானத்தில் தேசிய ரீதியிலான கடற்கரை கபடி நடைபெற்றது .அதன் பதிவுகள் சில.

நேற்று வல்வை ரேவடி விளையாட்டு கழக கடற்கரை மைதானத்தில் தேசிய ரீதியிலான கடற்கரை கபடி நடைபெற்றது .அதன் பதிவுகள் சில.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.