Saturday, August 29, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home செய்திகள்

ஜெனிவாவில் சிறிலங்காவைத் துளைத்தெடுக்கத் தயாராகும் நாடுகள்

by admin
22/10/2012
in செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், வரும் 1ம் நாள் இடம்பெறவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்துக்காக, சிறிலங்கா சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகளும் கேள்விகளை எழுப்பியுள்ளன.

ஸ்பெய்ன், கனடா, மெக்சிகோ, பிரித்தானியா, அமெரிக்கா, செக் குடியரசு, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளே சிறிலங்காவின் அறிக்கை தொடர்பாக ஏற்கனவே கேள்விகளை எழுப்பியுள்ளன.

வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் தாமதிக்கப்படுவது, உயர் பாதுகாப்பு வலயங்கள், ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள், 2006இல் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படாமை, மூதூரில் 17 பிரெஞ்சுத் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின் படுகொலை, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, கேலிச்சித்திர ஓவியர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக இந்த நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன.

சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம், சனல் – 4 காணொளி தொடர்பான விசாரணை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான இருதரப்புப் பேச்சுக்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் ஏற்படாமை ஆகிய விடயங்கள் குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தில், உள்ளடக்கப்படாத பரிந்துரைகளின் நிலை என்ன என்று அமெரிக்காவும் பிரித்தானியாவும் கேள்விகளை எழுப்பியுள்ளன.

உள்நாட்டுப் போரின் போது, இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஒரு முறைப்படியான சுதந்திர விசாரணை நடவடிக்கைகள் மூலம் சிறிலங்கா அரசாங்கம் எப்போது பொறுப்புக்கூறப் போகிறது என்று கனேடிய அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா பலமுனைகளில் நெருக்கடிகளை எதிர்நோக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் நவம்பர் 1ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா தொடர்பான விவாதத்தை அடுத்து, நவம்பர் 5ம் நாள் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

by சேரன்
29/08/2026
0

யாழ்ப்பாணம் – மணற்காட்டுப் பகுதியில் நேற்று (28.08.2026) விஷமிகளால் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தீ, இன்று சனிக்கிழமை (29.08.2026) இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது....

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

by சேரன்
27/08/2026
0

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 1,300-க்கும் மேற்பட்டோர்...

செம்மணியின் உண்மையை கண்டறிவோம் – யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

செம்மணியின் உண்மையை கண்டறிவோம் – யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

by சேரன்
26/08/2026
0

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரும் செயற்பாடுகள் நிதி பற்றாக்குறை காரணமாக ஒருபோதும் நிறுத்தப்படாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட...

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

by சேரன்
23/08/2026
0

தெற்காசியாவில் பொதுமக்களால் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை உருவெடுத்துள்ளதாக Pew Research Center மேற்கொண்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை...

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

by சேரன்
21/08/2026
0

யாழ்ப்பாணம்: பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புகள் காரணமாக இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....

இலங்கை எச்சரிக்கை நிலையில்: மிகவும் வலுவான “எல் நினோ” – நீர், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல்

இலங்கை எச்சரிக்கை நிலையில்: மிகவும் வலுவான “எல் நினோ” – நீர், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல்

by சேரன்
20/08/2026
0

இலங்கை தற்போது பல தசாப்தங்களில் காணப்படாத அளவுக்கு தீவிரமான எல் நினோ (El Niño) காலநிலை நிலைமையை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில்...

Next Post

சர்ச்சையைக் கிளப்பியுள்ள மிதக்கும் இலங்கையின் ஆயுதக் களஞ்சியம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
சிறப்புற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தீர்த்தத் திருவிழா: குவிந்த அடியவர்கள்

சிறப்புற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தீர்த்தத் திருவிழா: குவிந்த அடியவர்கள்

28/08/2026
இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

27/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.