Friday, August 28, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home தாயக செய்திகள்

தமிழ் மக்கள் அடக்கியாளப்படுவதை கண்டும் காணாமல் இருக்கவேண்டுமா? சி.வி.விக்னேஸ்வரன்கேள்வி

by admin
02/10/2016
in தாயக செய்திகள்
0
தமிழ் மக்கள் அடக்கியாளப்படுவதை கண்டும் காணாமல் இருக்கவேண்டுமா? சி.வி.விக்னேஸ்வரன்கேள்வி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக குரல்கொடுப்பதை இனவாதம் என பெரும்பான்மை சமூகம் பேசுவதாக குறிப்பிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் அடக்கியாளப்படுவதை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என இவர்கள் கருதுகின்றார்களா என கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ‘இலங்கை அரசியல் யாப்பு’ எனும் நூல் வெளியீட்டில் கலந்துகொள்ள முடியாத காரணத்தால் தமது உரையை வடக்கு முதல்வர் அனுப்பிவைக்க, அதனை பேராசிரியர் சிற்றம்பலம் வாசித்தார். குறித்த உரையிலேயே வடக்கு முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

”இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த நூறு ஆண்டு காலங்களாக தமிழ் மக்கள் தமது அரசியல் முன்னெடுப்புக்களில் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதும் அதன் விளைவாக தோல்விகளை தழுவிக் கொள்கின்ற செயற்பாடுகளும் நடைபெற்றுவருவது நாம் அனைவரும் அறிந்துள்ள விடயம். இந்நூலில் குறிப்பிட்டவாறு தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு வெற்றிக்கான வழிவகைகளைத் தேடுவதற்கு நாம் தயார் இல்லை எனின், தொடர்ந்தும் நாம் தோல்விகளை சந்திப்பதற்கு தயாராகின்றோம் என்பதே யதார்த்தம் ஆகின்றது.

இலங்கையில் வாழும் தமிழர்களும் ஓரணியின் கீழ் ஐக்கியப்பட்டு தமது உரிமைக்காக வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு என்ற பேதங்கள் இன்றி மொழியால் ஒன்றுபட்டு உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய காலம் கனிந்து வந்துள்ளது.

சில வேளைகளில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றியும் அவர்களின் சுய நிர்ணய உரிமை பற்றியும் சில சிங்கள தலைவர்களும் இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட தலைவர்களும் அவ்வப்போது சார்பான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த போதும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவர்கள் தமது கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு தமிழின அழிப்பை ஏற்றுக்கொள்கின்ற அரசியல் தலைவர்களாக மாற்றம் பெற்றது நாம் தெரிந்ததே. அத்தோடு, தமிழர்கள் இனவாதம் பேசுவதால்தான் தாமும் பேசுவதாக கூறுகின்றார்கள்.

தமிழர்கள் தமது பாரம்பரிய நிலங்களில் குடியேறுவதற்கும், அங்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தமது கலாசாரங்களை பேணிப் பாதுகாப்பதற்கும், இராணுவ பிரசன்னம் அற்ற இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்காகவும் விரும்பி மேற்கொள்ளும் நியாயபூர்வமான போராட்டங்கள், கோரிக்கைகள் ஆகியன சிங்கள தலைமைகளுக்கு இனவாதத்தை தூண்டுகின்ற ஒரு செயலாகத் தென்படுகின்றது. அதனால் உரிமைக்காக குரல்கொடுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களை சிறையில் அடைக்க வேண்டும், ஒட்டுமொத்த தமிழர்களையும் இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் எனச் சிலர் சிங்கள பேரினவாதிகளாக மாறி கொக்கரிக்கின்றார்கள்.

எமது உரிமைக்காக நாம் குரல் கொடுக்கின்ற போது இனவாதம் பேசுகின்றோம், சிங்கள மக்களை சினமடையச் செய்கின்றோம், இந்த நாட்டில் மீண்டும் ஒரு முறை இனக்கலவரங்களை உண்டாக்குவதற்கு முயற்சிக்கின்றோம் என்று கூறுகின்றார்கள். தமிழ் மக்களை அடக்கியாள முயற்சித்து, அவர்கள் அவை சார்பான நடவடிக்கைகள் எடுப்பதை நாம் கண்டும் காணாதது போல் இருக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகின்றார்களா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

மருதனார்மடம்-யாழ் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது.

மருதனார்மடம்-யாழ் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது.

by admin
04/10/2023
0

மருதனார்மடம்-யாழ் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது. இப் போராட்டமானது முல்லைத் தீவு நீதிபதியான ரீ.சரவணராஜாவுக்கு குருந்தூர் மலை தீர்ப்பை இட்டு தொடர் அழுத்தங்கள் காரணமாக அவர் நாட்டை...

வல்வெட்டித்துறை ஆதிகோவில் மக்களால் அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனுடைய 36-வது ஆண்டு நினைவு தினம் 26.09.2023

வல்வெட்டித்துறை ஆதிகோவில் மக்களால் அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனுடைய 36-வது ஆண்டு நினைவு தினம் 26.09.2023

by admin
04/10/2023
0

https://youtu.be/MXO766p0xr8?si=hLCCzbqPdxYr5iN8

கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023

கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023

by admin
04/10/2023
0

கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023 https://youtu.be/jSiLg2io06o?si=w-wY0XCuBjn237wv

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023

by admin
04/10/2023
0

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023 நல்லூரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய...

குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் … தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வு பெரும் திரளான மாவீரர் உறவுகளின் கண்ணீர்களுடன் உணர்வுபூர்வமாக  இன்றைய தினம்(27-11-2022 ) நடைபெற்றது

27/11/2022
0

குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் … தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வுபெரும் திரளான மாவீரர்...

இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 )   எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன்   குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை-(காணொளி இணைப்பு)

இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 ) எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன் குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை-(காணொளி இணைப்பு)

by admin
27/11/2022
0

இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 ) எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன் குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை

Next Post
புதுக்குடியிருப்பு இனிய வாழ்வு இல்லத்திற்கு சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகத்தினரால்(CWN)  நிதி உதவி வழங்கப்பட்டது

புதுக்குடியிருப்பு இனிய வாழ்வு இல்லத்திற்கு சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகத்தினரால்(CWN) நிதி உதவி வழங்கப்பட்டது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.