Friday, October 23, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home Valvai Temples

வல்வை முத்தமாரி அம்மன் கோயில்

by admin
29/01/2013
in Valvai Temples
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆரிய சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணம் வந்த காலமாகிய 1048ம் ஆண்டுக்குப் பின்னும் பறங்கியர் யாழ்ப்பாணம் வந்த காலம் ஆகிய 1617ம் ஆண்டுக்கு முன்னும் இக் கோயில் உண்டாகியிருக்கலாம் என அபிப்பிராயப்படுகிறார்கள். முதலில் ஒரு கொட்டகையாய் இருந்து காலாகாலங்களில் சாந்துக் கட்டிடமாய் வளர்ந்திருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள். தற்போது ஈராக், ஈரான் என்று அழைக்கப்படும் பழைய சுமேதிய நாட்டில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த சுமேதிய மறவர்களென்ன இவர்களுக்குப் பல நூறு சந்ததிகளுக்குப் பின் வந்த ஆரியச் சக்கரவர்த்திகளாகிய மறவர்களென்ன இவர்களெல்லாம் தங்கள் பாதுகாவல் தெய்வமாய் பெண் தெய்வத்தையே வணங்கி வந்தார்கள். வள்ளுவப் பெருந்தகைக்கு உடன் பிறந்தாளாகக் கூறப்படும் ஒளவையாரும் தாம் பாடிய ஆத்திசூடியில் ஷதாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை|| என்று தானே அருளினார். நல்லூர் வீரமா காளி அம்மன், பருத்தித்துறை பத்திரகாளி அம்மன், தொண்டமானாறு வீரமாகாளி அம்மன், இடைக்காடு, மாதகல், அராலி, நயினாதீவு நாகபூஷணியம்மை ஈறாக எங்கும் அம்மன் கோயில்களே உண்டாகி இருக்கின்றன.

வல்வெட்டித்துறைக்கு கோடியாய் கரையில் இருந்து புறப்பட்ட தோணி ஒன்றில் உதவி கேட்டு வந்த வயோதிபமாது தன்னையும் வல்வையில் கொண்டு சென்று இறக்கும் படி கோர அவர்கள் அதன்படி ஏற்றி வந்து வல்வைக் கரையில் இறக்கியதும் வயோதிப மாது மறைந்து விட்டனihம். இது தான் முத்துமாரி அம்மன் கோயில் தோன்றிய வரலாறு எனக் கூறப்படுகின்றது. 1796ல் பெற்ற அரசினர் இடாப்பில் இக்கோயில் காட்டப் பெற்றிருக்கின்றது.01.02.1846ல் பிரசித்த நொத்தாரிசு கதிர்காமர் சிதம்பர நாதர் முன்னிலையில் இராசிந்தான் முத்துமாரி அம்மன் கோயில் நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோயில்களுக்கு மகமை எப்படி கொடுக்கப்பட வேண்டும் என முடிவு செய்து இருக்கின்றார்கள். 1864ல் எழுதப் பெற்ற அரசினர் அறிக்கையிலும் புண்ணிய மணியகாரனால் அம்மன் கோயில் கல்லால் கட்டப் பெற்றதென்னும் சித்திரை மாதத்தில் 15 நாட்கள் திருவிழாக்கள் நடந்தது எனவும் குறிக்கப் பெற்றிருக்கின்றது. சில ஆண்டுகள் திருமேனியார் வெங்கடாசலம் மணியமாயிருந்து திருப்பணிகளும் செய்திருக்கின்றார்கள். அப்பால் பெ.கதிர் காமத்தம்பி அதன் பிறகு சு.க.தம்பிப்பிள்ளை மணியமாக இருக்கும் போது 1904ம் ஆண்டில் ஒரு தடவை புனராவர்த்தன கும்பாபிNஷகம் நடந்திருக்கின்றது. பின்னர் ஆ.நாகமுத்து சு.க.தம்பி;ப்பிள்ளை நா.கனகசுந்தரம், ஆ. வேலுப்பிள்ளை ஆகியோர் மணியமாக இருந்த காலத்தில் தான் எழுந்தருளி முத்துமாரி அம்மன் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.வ.வ. இராமசாமிபிள்ளை 1933ம் ஆண்டு மணியமாக நியமனம் பெற்றவுடன் பழைய கட்டிடங்கள் யாவும் இடிக்கப்பெற்று கற்கட்டிடங்களாகவும் கட்டப் பெற்றன. இங்ஙனமாக (வ.இ.அப்பா) காலத்தில் புதுப்பித்து கட்டப் பெற்றவற்றின் விபரங்களாவன

 

 

1. கர்ப்பக்கிரகமும் அர்த்த மண்டபமும் – சி.செல்லத்துரையும் பெண் வள்ளி அம்மாளும் 2. பிள்ளையார் – பொ. தங்கவேலா யுதமும் பெண் இராசரெத்தினமும் 3. முருகையா – சி. ஆனந்தமயிலும் பெண் விசாலாட்சியும் 4. காத்தலிங்கம் – வ.இ.வைத்தியலிங்கமும் பெண் சௌந்தரி அம்மாளும் 5. சண்டிசுவரி – ஆ. செல்லத்துரையும் பெண் தங்கரெத்தினமும் 6. தீர்த்தக்கிணறு – தா.சின்னத் தம்பியும் பெண் தங்ககெண்ணும் 7. மின்வெளிச்ச அறை – சி.வேலும் மயிலும் ஐயர் 8. வசந்த மண்டபம் – வே. வ.சிவப்பிராகசம், மு.விசுவலிங்கம் 9. யாகசாலை – வி.செல்வவிநாயகமும் பெண் விசாலாட்சிப்பிள்ளையும் 10. திருச்சபை – வ.இராமசாமிப்பிள்ளையும் பெண் இராசம்மாளும் 11. மகாமண்டபம், தரிசன மண்டபம் – வல்வைப் பொதுமக்கள் 12. நந்திபலிபீடம் – மா. இராசா

 

இவ்வேலைகள் முடித்து 1935ம் ஆண்ட யுவ வருடம் ஆனி மாதம் 24ம் திகதி வேதாரணியம் சிவஸ்ரீ ச.சோமசுந்தரக்குருக்கள் அவர்களால் சம்புரோட்சனம் ஆகமவிதிப் படி செய்யப்பெற்றது. 1943ம் ஆண்டு மணிக்கோபுரமும் மணியும் வல்வைப் பொதமக்களால் செய்யப்பெற்றன. தேர்முட்டி சேதமடைந்திருந்தமையால் அதை நல்லமுறையில் புதிதாக திரு. சி.விஷ;ணுசுந்தரம் அவர்கள் கட்டுவித்தார்கள். பூங்காவன மண்டபம் பொதுமக்களால் கட்டப்பெற்றது. 1957ம் ஆண்டில் 12ம் உற்சவக்காரர் கேள்விக்கிணங்க இராசகோபுரம் இடிக்கப்பெற்று கீழ்ப்பகுதி வைரக் கருங்கற்களினால் கட்டப்பெற்று இராஜகோபுர மேல் பகுதியும் நல்ல அலங்கார முறையில் கட்டிமுடிக்கப் பெற்றது. முத்துமாரி அம்மனுக்கு சித்திரத் தேர் செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததில் ஊரவர்களே பணம் சேகரித்து 1979ம் ஆண்டு வரும் பெருந்திருவிழாவுக்கு முன் அம்மனுக்கு தேர் செய்வித்து முடித்தார்கள். பின்பு பிள்ளையாருக்கும் முருகனுக்கும் 1981ம் ஆண்டு திருவிழாவுக்கு முன் செய்யப் பெற்று விட்டன. இக்கோயில் பூசைகள் திருவிழாக்கள் எல்லாம் மிகச் சிறப்பாகவும் அலங்காரமாகவும் நடைபெற்று வருகின்றன. தொன்று தொட்டே இக்கோயிலில் சைவக்குருக்கள்களே பிரதம குருக்களாக இருந்து வருகின்றார்கள். 16.01.1963 தொடக்கம் சிவஸ்ரீ சோ. தண்டபாணி தேசிகர் அவர்கள் (ஜே.பி.அகிலஇலங்கை) பிரதம குருக்களாக இருந்து சிறப்பாகவும் பக்தியுடனும் தொண்டாற்றி வருகிறார்கள்.

 

 

Share this on WhatsApp
admin

admin

Related Posts

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மனும் புண்ணியமணியகாரரும்.

by admin
30/01/2013
0

புண்ணியமணியகாரர் பற்றி பல வரலாறுகள் கூறுகின்றன. வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் வரலாற்றை எழுத்துருவாக்கித் தந்த முதலாவது நூல் “வல்வை முத்துமாரியம்மன் வரலாறு” என்னும் நுலாகும். மேற்படிநூலினைத் தொடர்ந்து 1.  ...

சிவன் கோயில்

சிவன் கோயில்

by admin
29/01/2013
0

யாழ்ப்பாணத்து வல்வெட்டித்துறை என்னும் பேரூரின் புகழை ஓங்கச் செய்து மிளி;ர்ந்து கொண்டிருப்பது அங்குள்ள சிவன் கோயிலாகும். கோயில்களுடன் தம் பெயரைப் பினைத்து புகழெய்தியவர் மகனார் பெரியதம்பியார் என்னும்...

நெடியகாடு திருச்சிற்றம்பலம் பிள்ளையார் கோயில்

நெடியகாடு திருச்சிற்றம்பலம் பிள்ளையார் கோயில்

by admin
29/01/2013
0

19ம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டகளில் பிள்ளையார், வயிரவர் என்று அழைக்கப் பெற்ற ஒரு சைவ ஆசாரசீலர் தற்போதைய கோயில் தெற்கு வீதியில் அமைக்கப் பெற்றிருந்த மடத்தில் பிள்ளையாரை...

தொண்டமானாறு செல்வச்சந்நிதி

தொண்டமானாறு செல்வச்சந்நிதி

by admin
29/01/2013
0

இவ்ஆலயத்தின் வரலாற்றை நோக்கினால் இது அரசியல் பொருளாதார சமூக வரலாற்றுடன் மிகுந்த நெருங்கிய தொடர்புடையதாகவும் அதற்கு அப்பால் பக்தி வரலாற்றுடன் தொடர்புடையதாகவும் உள்ளது.இங்கு ஓடும் தொண்டமானாறு ஷவல்லிநதி||...

பொலிகண்டி கந்தவனக் கடவை கந்தசாமி

by admin
29/01/2013
0

கோயில்சீரும் திருவும் பொலியும் ஈழ மணித் திருநாடு தேவாரம் பாடிய சிவஸ்தலங்களையும் திருப்புகழ் பாடிய குகன் தலங்களையும் உடையது. அதன் வடகடல் ஓரத்தில் வல்வெட்டித்துறைக்கு கிழக்கே மூர்த்தி,...

வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரன் ஆலயம்

by admin
29/01/2013
0

வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரன் ஆலயம் இவ்ஆலயமானது 1845ம் ஆண்டு காலப்பகுதியில் இக்கிராமத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்த்து வந்த சிவஸ்ரீ ஆறுமுகக்குருக்கள் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றாகும். குருக்கள்...

Next Post
சிவன் கோயில்

சிவன் கோயில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.