மரண அறிவித்தல்
Dr. வைத்தியலிங்கம் கைலாசபதி
மண்ணில் : 01.04.1940 விண்ணில் : 04.02.2018
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், புத்தளத்தை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியவிங்கம் கைலாசபதி அவர்கள் 04.02.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் வல்வெட்டித்தறையை சேர்ந்த காலஞ் சென்ற வைத்தியலிங்கம் (பண்டிதர் அப்பா), லெட்சுமிகாந்தம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிராசா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.
சுசீலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவனும், அருள்நந்தி ,குமுதினி ,அரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், தாரணி, உமையோள், பிரதிபா ஆகியோரின் அன்பு மாமனாரும், அகிலேஷ், மாதினி, ஷரணி, திவ்யன் ,மதுரன் ஆகியோரின் அருமைப் பேரனும்,
காலஞ்சென்ற தையல்நாயகி, சங்கரநாதன், வாலாம்பிகை, கருணாம்பிகை, நீலாம்பிகை, அமுதாம்பிகை, காலஞ்சென்ற முருகவேல், முத்துக்குமரன், சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பொன்னுச்சாமி, காலஞ்சென்ற துரைராசா, சற்குணசௌந்தரி, ரூபசௌந்தரி, காலஞ்சென்ற வில்வராசா, ராஜசௌந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கதிர்காமதாசன், காலஞ்சென்ற புஸ்பவதனா, செந்தித்துரை, செல்வச்சந்திரன், ரத்தினசோதி, சந்திரபதி, சுசிலா, பரிமளேஸ்வரி, செல்வசுந்தரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமிர்தநாயகி, பத்மாவதி, காலஞ்சென்ற பரமசிவன், காலஞ்சென்ற வல்லிபுரம், தாயுமானவர் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்கிழமை மாலை (06.02.2018) 4 மணியளவில் கிரியைகள் ஆரம்பித்து அதனைத் தொடர்ந்து புத்தளத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்
அருள்நந்தி : 077772413
குமுதினி : 0773937614
அரவிந்தன்: 0750386405










