31ஆம் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் அமரர் திரு ஐயம்பிள்ளை மகேந்திரராஜா(ஓய்வு பெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர் )

நவிண்டில் கரவெட்டியை பிறப்பிடமாகவும், பூந்தோட்டம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஐயம்பிள்ளை மகேந்திரராஜா அவர்கள் கடந்த 26.02.2022 சனிக்கிழமை அன்று இறைபதமடைந்தார். எங்கள் அன்புத் தெய்வத்தின் மறைவுச்செய்தி கேட்டு நேரில் வருகை தந்தோர். தொலைபேசி, சமூகவலைதளங்கள் மூலமாக எமக்கு ஆறுதல் தெரிவித்தோருக்கும் மற்றும் எமக்கு பல வழிகளில் உதவி புரிந்த அனைவருக்கும் எமது குடுப்பத்தினர் அனைவரின் சார்பிலும் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரது 31ஆம் நாள் நினைவஞ்சலிக்கிரியை எதிர்வரும் 28.03.2022 திங்கள்க்கிழமை அதிகாலை 6 மணியளவில் அஸ்தி உறணி தீத்தக்கரையில் கரைக்கப்பட்டு தெணியம்மை, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஆத்ம சாந்திப்பிராத்தனையும் அதனைத் தொடர்ந்து மதியபோசனை நிகழ்வும் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குடும்ப சகிதமாக வருகை தருமாறு அன்பு அழைக்கின்றோம்.
தகவல் :- மனைவி – ம.பலேந்திரராணி
மகள் – ம. இராஜலக்கியா










