இன்று (19.02.2013) செவ்வாய் கிழமை பி.ப.2.00 மணியளவில் நெடியகாடு சிற்றம்பலபிள்ளையார் ஆலயவீதீயில் யா/வல்வை அ.மி.த.க.பாடசாலை அதிபர் திரு.பூ.சத்திவேல் தலைமையில் , திரு.சி.சிறிகாந்தன் (முகாமையாளர் இலங்கை வங்கி வல்வெட்டித்துறை) பிரதம விருந்தினராக பங்கேற்று சிறப்பித்துள்ளார், மற்றும் சிறப்பு விருந்தினா்களும் கலந்துகொண்டுள்ளனா்.
மைதான நிகழ்வுகளின் இடைவேளை, உடற்பயிற்சி, இல்லங்களுக்கிடையிலான கழக அஞ்சல் என போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.வல்வெட்டித்துறை வாழ்மக்கள் பலரும் ,பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் கண்டுகளித்தனர்.அதனை தொடர்ந்து அதிபர்.பிரதம விருந்தினர் உரை, பரிசிகள் வழங்கல், நன்றியுரை கொடியிறக்கம் என நிகழ்வுகள் இனிது நிறைவுபெற்றன.













