இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. புதிய விலைகள் ஆகஸ்ட் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளன.
இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை ஒரு லீற்றருக்கு ரூ.15 குறைக்கப்பட்டு ரூ.399 ஆகவும், ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை ரூ.20 குறைக்கப்பட்டு ரூ.475 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி, ஆட்டோ டீசல் ரூ.382, சுப்பர் டீசல் ரூ.478 மற்றும் மண்ணெண்ணெய் ரூ.285 என்ற விலைகளில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன.
புதிய எரிபொருள் விலைகள் ஆகஸ்ட் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலில் உள்ளன.










