நேற்று வல்வையிலும் கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் நடந்த உதவி வழங்கும் நிகழ்வுகள்…
கனடா – ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் வழங்கிய தாயக உதவிகள்
வல்வை, கிளிநொச்சி, வுவுனியாவில் ஒரே நாளில் மூன்று இடங்களில்..
கனடாவில் செயற்பட்டுவரும் ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் அமைப்பினர் வல்வை, கிளிநொச்சி, வுவுனியா ஆகிய இடங்களில் முக்கிய உதவிவழங்கும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தனர்.
வல்வையின் புளுஸ் வி.கவின் முக்கிய ஆரம்பகால உறுப்பினர்கள் புடைசூழ கடந்த வியாழன் இரவு நிகழ்வு நடைபெற்றது.
முதலாவதாக போரினால் ஒரு கையையும், ஒரு காலையும் இளந்த முன்னாள் கடற்புலி போராளியான கம்பிகளின் மொழி பிறேமிற்கு தொடர்ந்து வாழ்வை மேம்படுத்த மின்சாரத்தில் ஓடும் மூன்று சில்லு மோட்டார் சைக்கிளும், அதற்கான மேலதிக பற்றரியும் வழங்கப்பட்டது.
இரண்டாவதாக கிளிநொச்சியில் பண்ணை வைத்து இயங்கும் ஒரு கையை இழந்த போராளியான சந்ரு என்பவருக்கு கோழிக்குஞ்சுகள், வளர்ப்பு மீன் குஞ்சுகள், அதற்கான உணவு, பத்தாயிரம் ரூபா நன்கொடை என்பன வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து வவுனியாவில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது, இதில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழில் வழங்கும் புதிய முயற்சி முன்னெடுக்கப்பட இருக்கிறது.
ஒரே நாளில் மூன்று சாதனைகள் படைக்கப்பட்டன.. தொடர்கிறது பணி..
இதற்கான நிகழ்வுகளை இலங்கையில் உள்ள ரியூப் தமிழ் நிறுவனத்தினர் சிறப்பாக முன்னெடுத்தனர்.