இறுதியாட்டத்திற்கு இளங்கதிர் அணி.தகுதி பெற்றுள்ளது
மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில்
சைனிங்ஸ்இ எதிர் இளங்கதிர் அணிகள் மோதின.
இறுதிவரை மிக விறுவிறுப்பாக இடம்பெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் எந்தவித கோல்களும் பதிவுசெய்யாமல் போக வெற்றியை தீர்மானிக்க சமனிலை தவிர்ப்பு உதை மூலம் 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது இளங்கதிர் அணி.