வல்வை செய்திகள்

35வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்டம். இளங்கதிர் அணியை 4:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது சைனிங்ஸ் அணி.

35வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்டம்.
இளங்கதிர் அணியை 4:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது சைனிங்ஸ் அணி.

மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்த அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட தொடர் இன்று ஆரம்பமாகியது.

இரண்டாவது போட்டியில் சைனிங்ஸ் அணி இளங்கதிர் அணியை 4:0என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சைனிங்ஸ் அணி சார்பாக உதயன் 3 முகுந்தன் 1 கோல்களை போட்டனர்.

ஆட்டநாயகனாக சைனிங்ஸ் அணி சார்பாக 3 கோல்களை போட்ட உதயன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.இவர் வன்னி பிரதேசத்திலும் வல்வை விளையாட்க்கழகத்தின் உதைபந்தாட்டத்திலும் பங்கு பற்றி பல திறமையான வெற்றிகளுக்கும் வழிவகுத்தவர்களில் இவரும் ஒருவராவார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *