பாதயாத்திரையில் வந்த யாழ் யாத்திரீகர் மாமாங்கத்தில் ,நேற்றைய தினம் திடீர் என்று மரணித்திருந்தார்
பாதயாத்திரையில் வந்த யாழ் யாத்திரீகர் மாமாங்கத்தில் ,நேற்றைய தினம் திடீர் என்று மரணித்திருந்தார்
யாழ்ப்பாணம் செல்வச் சந்நதியிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பாத யாத்திரையாகச் சென்றவர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் யாத்திரீகர் மட்டக்களப்பு மாமாங்கத்தில் திடீரென்று
உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் காலை 6:30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது என்று யாத்திரிகர் குழுத் தலைவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கைதடியைச்சேர்ந்த கே. சிவலிங்கம் (வயது 70) என்பவரே இவ்வாறு திடீரென இயற்கையெய்தி னார்.
யாழ்ப்பாணம் செல்வச் சந்நதியி லிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் 62 பேர் கொண்ட யாத்திரிகர்கள் குழு 23 நாட்களாக பாதயாத்திரையாக கதிர் காமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார்கள்
ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பு மாமாங்கத்தை வந்தடைந்த அவர்கள் நேற்றைய தினம் காலை அங்கிருந்து புறப்பட இருந்த சமயம் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
மட்டக்களப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் திடீர் இறப்பு விசாரணை அதிகாரியின் விசாரணைக்குப் பின்னர் சடலத்தை மட்டக்களப்பு வைத்தி யசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்
காக அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்ததாவது:
ஏழு வருடங்களாக யாத்திரிகர் சிவலிங்கம் எங்களுடன் பயணித்து வருபவர். வழமை போல இன்று காலை மாமாங்க ஆலயத்தில் பஜனை முடித்த பிற்பாடு நாங்கள் பணிஸ் மற்றும் தேநீரை அருந்திவிட்டு புறப்பட இருந்த சமயம் சிவலிங்கம் துள்ளி குதித்தாடி சந்தோத்தில் இருந்தார்.
மறுகணம் அவர் மயக்கமுற்று சரிந்து விழுந்தார். உடனே நாங்கள்
அம்புலன்ஸ்க்கும் 119க்கும் தகவல் கொடுத்தோம்.அம்புலன்ஸ் வருவதற்கு இடையில் அவரது உயிர் பிரிந்துவிட்டது.
பின்புநாம் பொலிஸாருடன் தொடர்பு கொண்டோம். திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வந்து என்னையும் இன்னும் சிலரையும் விசாரணைக்குப்படுத்தினார். அதன் பின்பு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது.
எனது பாதயாத்திரை வரலாற்றில் பாதை யாத்திரையின் பொழுது ஒருவர் உயிரிழந்த சம்பவம் இதுவாகத்தான் இருக்கின்றது. என்றார்














