வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரினால் சிதம்பராக் கல்லூரிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் திரு.தி.சுபாகரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இவர் க.பொ.த.(சா.த) , க.பொ.த.(உ.த) வகுப்புகளிற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (Information and Communication Technology) பாடத்தை தமிழ், ஆங்கில மொழிகளில் கற்பிப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றவர். ஒரு வருடமாக ICT பாடத்திற்கு ஆசிரியர் இல்லாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இவரின் வருகை ஒரு வரப்பிரசாதமாகும்.










