Tuesday, October 13, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home மருத்துவம்

அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ ஆறு வழிகள்

by admin
01/02/2013
in மருத்துவம்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

எப்பேர்ப்பட்ட மனிதர்களையும் சாய்த்துவிடும் வல்லமை ஓய்வுக்கும் முதுமைக்கும் இருக்கிறதா? இந்தக் கேள்விக்கு மருத்துவர்கள் அளிக்கும் உறுதியான பதில்… ”இல்லை.”

அப்படி என்றால் ஓய்வையும் முதுமையையும் எப்படி எதிர்கொள்வது?

1.அதிகாரம் ஒரு சுமை பெரும்பாலானவர்கள் ஓய்வுக்குப் பின் உடைந்துபோவது பணி சார்ந்தும் அதன் தொடர்ச்சியாக வீட்டிலும் உள்ள அதிகாரம் பறிபோவதால்தான். ஆனால், நன்றாக யோசித்துப்பார்த்தால், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும்… அதிகாரம் என்பது ஒரு சுமைதான். ஆகையால், ஓய்வு காலம்தான் உண்மையில் ஒரு மனிதன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கான காலகட்டம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த விஷயம், வேலைக்குச் செல்லும் நாட்களில், நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாகக் கவனித்துக்கொள்ளும் வாய்ப்புகளை வேலை ஆக்கிரமித்துக்கொள்ளும். ஆனால், ஓய்வு காலம் அதை நமக்கே நமக்கானதாக்குகிறது.

2.கட்டுப்பாடு அவசியம்! உணவு விஷயத்தில் சரிவிகிதச் சமச்சீர் உணவு சாப்பிடுவதை உறுதிசெய்துகொள்ளுங்கள். அலுவலகம் செல்லும்போது அவசர அவசரமாக உணவை வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டு ஓடியவர்கள், ஓய்வுக்குப் பின் நிறைய நேரம் கிடைப்பதால் விதவிதமாக சமைக்கச் சொல்லி சாப்பிட விரும்புவார்கள். ஆனால், இந்த வயதில் ஜீரண சக்தி குறைவாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக, வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு 2225 கலோரி முதல் 2500 கலோரி வரை தேவைப்படலாம். ஆனால், வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு 1800 முதல் 2000 கலோரியே போதுமானது. அதேபோல், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 1875 முதல் 2000 கலோரி வரை தேவைப்படலாம். ஓய்வுபெற்ற பிறகு 1600 முதல் 1800 கலோரி வரை (ஆண்களைவிட பெண்களுக்கு சில கூடுதல் வேலைகள் இருப்பதால்) தேவைப்படலாம்.

இரைப்பையின் வேலையைக் குறைக்க உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள். இனிப்பு, காரம், உப்பு, மசாலா நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தால், அதற்கேற்ப உங்கள் உணவை அமைத்துக்கொள்ளுங்கள்.

3.பரிசோதனையின் பலன்கள்! பெரும்பாலான நோய்கள் வெளியில் தெரிவதற்கே அதிக நாட்கள் ஆகும். அப்படி வெளியில் தெரியாமலேயே இருந்துவிட்டுத் திடீரென ஒருநாள் வெளிப்படும்போது அதைத் தாங்குவதற்கு நமது உடலும் பொருளாதாரமும் பலமாக இருக்காது. எனவே, வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. என்னென்ன நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம், எந்தெந்த நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை முன்கூட்டியேத் தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றபோல் நம்முடைய வாழ்க்கை முறையையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வசதியாக இருக்கும்.

4.மாற்றிக்கொள்ள வேண்டிய பழக்கங்கள்! சிலருக்குப் பல வருடங்களாக புகைப்பிடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் பழக்கமோ அல்லது இரண்டுமோ இருக்கலாம். தொடர்ச்சியான இந்தப் பழக்கங்களினால் பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த வயதிலும் அவற்றைத் தொடர்ந்துகொண்டிருந்தால் பாதிப்பின் அளவு அதிகமாகி, குணப்படுத்த முடியாதபடி பல சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும்.

5.இயற்கையே, ரிலாக்ஸ் மீ! மன அழுத்தம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. ஆனால், இது மற்றவர்களைவிடவும் முதிர் வயதினருக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் மூலம் உங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக்குங்கள். யோகா, தியானம் போன்றவற்றின் மூலம் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள்.

6.நிம்மதி தரும் நிதி! முதுமைக் காலத்தை நிம்மதியுடன் கழிக்கப் பொருளாதாரமும் காரணமாக அமைகிறது. எனவே, பணியில் இருக்கும்போதே ஓய்வு காலத்துக்கு என தனியாகச் சேமித்து வையுங்கள். இதனால், ‘அடுத்தவரைச் சார்ந்து இருக்க வேண்டியத் தேவையில்லை’ என்கிற தன்னம்பிக்கை கிடைக்கும். திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்காக வீட்டில் உள்ளவர்களிடம் கையேந்தாமல் உங்களிடம் இருக்கும் தொகையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்!

Share this on WhatsApp
admin

admin

Related Posts

தொப்பை வேகமாக குறைய எளிய பயிற்சி

by admin
20/04/2017
0

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கவல்ல சௌ சௌ..!

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கவல்ல சௌ சௌ..!

by admin
03/01/2015
0

நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் சௌ சௌவும் ஒன்று. சௌ...

அல்சரும்… உண்மையும்…

அல்சரும்… உண்மையும்…

by admin
02/01/2015
0

நேரத்திற் குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் பெரும்பாலும் சரியான நேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்து...

செரிமான பிரச்சனையா? இதை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க

செரிமான பிரச்சனையா? இதை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க

by admin
30/12/2014
0

தினசரி வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தப்படும் தயிரானது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தயிரில் பல வித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. இதனை தினமும் பயன்படுத்துவது...

அழகு விஷயத்தில் பலரும் செய்யும் தவறுகள்..

அழகு விஷயத்தில் பலரும் செய்யும் தவறுகள்..

by admin
29/12/2014
0

எல்லோருமே தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். சிலருக்கு அதற்கான நல்ல ரசனை இருக்கும். நேரம் இருக்கும். ஆனால், சிலருக்கு நேரம் இருக்காது அல்லது...

வண்ணங்கள் வாழ்க்கையை இருட்டாக்கும்….

வண்ணங்கள் வாழ்க்கையை இருட்டாக்கும்….

by admin
13/12/2014
0

வீட்டில் அடிக்கடி செய்யும் இனிப்பு பண்டம் என்றால் அது கேசரியாகவோ, பாயசமாகவோ தான் இருக்கும். கேசரியில் சேர்க்கப்படும், முந்திரிப் பருப்பு, திராட்சை போன்ற பொருட்களில் சுவையும், சத்தும்...

Next Post
பணம் எனும் மாய மான்!

பணம் எனும் மாய மான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.