Friday, October 16, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home வல்வை செய்திகள்

என்ன பாவம் செய்தோம் நாம்…! – ம.செந்தமிழ்.

by admin
02/04/2016
in வல்வை செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமிற்குள் சென்று திரும்பிய தருணத்தில் இவ்வாறுதான் என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

மாரடைப்பு காரணமாக சாவடைந்த உறவினரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக சில நூறு கிலோ மீட்டரிற்கு அதிகமான தொலைவு கடந்து மண்டபம் முகாம் நுழைவாயிலை அடைந்தோம்.

நுழைவாயிலின் ஒருபுறம் பொதுக் காவலாளி. மறுபுறம் ஆயுதம் தாங்கிய காவலர். பொதுக்காவலாளி இருந்த இடத்திற்கு சென்று வந்த காரணத்தைக் கூறி உள்ளே செல்ல வேண்டும் என்பதனைத் தெரிவித்தேன்.

வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என முனுமுனுத்தவர் கைபேசியில் யாருக்கோ அழைப்பெடுத்து பேசினார். கலக்டர் அம்மா வரட்டாம்.. என சலிப்புடன் கூறியவர் செல்ல வேண்டிய இடத்திற்கு வழிகாட்டினார்.

அவர் குறிப்பிட்ட கட்டடத்தொகுதிக்குள் சென்றேன். ஒரு அம்மா இருந்த தோரணை அவரைத்தான் பார்கவேண்டும் என்று என் உள்ளுணர்வு கிசுகிசுத்தது.

வணக்கம் அம்மா… என்ற விளிப்புடன் வந்த காரணத்தை கூறி நின்றேன். அவர் ஏதோ பணியில் மூழ்கியவாறே எனது விடையத்தை அணுகினார். அவர்களில் யாராவது வந்து அழைத்துச் செல்வார்களா என்று முன்னைய பணியில்(!) இருந்து விடுபடாதவாறே கேள்வியெழுப்பினார்.

சுறுக்கென உச்சந்தலையில் ஏறிய கோபத்தை அடக்கியவாறு (வேறு என்ன செய்ய முடியும்..? அதாங்க நாங்கள் சிலோன் காரங்களாச்சே) இந்த நிலையில் எப்படி அவர்களால் வரமுடியும் என்று தாழ்மையுடன் கூறினேன்.

எதிர் முனையில் இருந்து பதிலில்லை. மீண்டும் நானே ஆரம்பித்தேன். வேண்டுமென்றால் கைபேசியில் அழைத்து உறுதிப்படுத்தவா எனக் கேட்டேன். அரைகுறையான தலையசைப்பே பதிலாக கிடைத்தது.

இருந்தும் அவரின் பதிலுக்கு காத்திராது கைபேசியில் அழைப்பெடுத்து நாங்கள் வந்திட்டம்.. வாசலில் நிக்கிறம்.. நீங்கள் ஒருக்கா அவர்களிடம் சொல்லிவிடுங்கோ… என நான் சொன்ன போது எதிர் முனையில் தேம்பல் ஒலிதான் கேட்டது. கைபேசியை கலக்டர் அம்மாவிடம் நீட்டினேன்.. அவர் வாங்க மறுத்து அருகே நின்ற ஒருவரிடம் வாங்கி பேசுமாறு உத்தரவிட்டார்.

ஏம்மா.. நான் Ro ….. பேசிறன்.. யாரும்மா நீ…? உன் பேரு என்னமா…? வந்திருக்கிறவங்க சொந்தக்காரங்களா…? என அதட்டல் தொனியில் அவர் பேசியது எனது பொறுமையை சோதித்தது. உடனே கலக்டர் அம்மா… யோவ் என்னய்யா நீ.. அவங்க இறந்தவரோட மனைவி… அவங்ககிட்டபோய் இப்படிதான் பேசுவியா…? என கடிந்துகொண்டார். இவங்க நல்லவங்களா இல்லை கெட்டவங்களா…? என்ற கேள்வி விடைகாண முடியாது என் உள்ளே தொக்கிநின்றது.

எத்தனை பேர் வந்திருக்கிறீர்கள்…? வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை…. சரி செல்லுங்கள்… என்று கலெக்டர் அம்மா(!) அனுமதி வழங்கினார்.

மீண்டும் முகாம் நுழைவாயிலிற்கு வந்தபோது என்னை அனுப்பிய பொதுக்காவலாளி எனது பயணப்பாதையை உறுதிப்படுத்தியவாறு நின்றிருந்தார். போகச்சொன்னார்கள் என்று அவரிடம் கூறியபின்னர் கதவினை திறந்து உள்ளே செல்ல வழிவிட்டார்.

நாங்கள் உள்ளே சென்று அரை மணிநேரம் இருக்கும்… கியூ பிரிவைச் சேர்ந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து நோட்டமிட்டுச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

மண்டபம் முகாமில் ஏதாவது விசேட நிகழ்வுகள் நடைபெறும் போது அந்நிகழ்விற்குரியவர்கள் நிகழ்வு குறித்த தகவலை சொல்லி வெளியில் இருந்து இத்தனைபேர் வருவார்கள் அவர்களை அனுமதிக்குமாறு வேண்டுகை கடிதம் ஒன்றை மனுவாக முகாம் பொறுப்பு கலெக்டர்(தனித்துணை ஆட்சியர்) அலுவலகத்தில் முன் கூட்டியே கொடுக்க வேண்டுமென்பது நடைமுறையில் உள்ளதாம்.

அது சரி, சுப நிகழ்வுகளுக்கு முன்கூட்டியே அனுமதி கோருவது ஏற்புடையதாயினும் மரண நிகழ்வின் போதும் இவ்நடைமுறையை இறுக்கமாக பேணுவது மனிதாபிமானமற்ற செயலாகும்.

அறிவிப்பு!
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் தங்கியுள்ள மண்டபம் முகாம் பாதுகாக்கப்பட்ட பகுதி. இதற்குள் அலுவல் மற்றும் குடியிருப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர யாரும் மண்டபம் முகாம் தனித்துணை ஆட்சியாளர் அனுமதி இன்றி உட்பிரவேசிக்கக் கூடாது. அத்துமீறி பிரவேசிப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உடனடியாக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
-தனித்துணை ஆட்சியர்
(மா.வ) மண்டபம் முகாம்.

madapam camp

முகாம் நுழைவாயில் உள்ள இந்த அறிவிப்பே ஈழத்தவர்கள் எவ்வாறான அடக்குமுறைக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி.

சிங்கள இராணுவத்தின் முள்வேலிகளைவிட மண்டபம் முகாம் நெருக்குவாரங்கள் மனதில் பெரும் வலியை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.

வாய்கிழிய தொப்புள்கொடி உறவென்று கூப்பாடு போடுபவர்கள் ஈழத்தமிழர்களை எந்தளவில் நடத்துகிறார்கள் என்பதற்கான ஒரு சோற்று பதமாகவே இன்நிகழ்வு அமைந்துள்ளது.

எங்கள் இனத்தை மொத்தமாக அழித்த மகிந்தனையும், மைத்திரியையும், ரணிலையும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுப்பவர்கள் எங்களை சாதாரண மனிதர்களாக மதித்தாலே போதும்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

ம.செந்தமிழ்.
mythrn@yahoo.com

Share this on WhatsApp
admin

admin

Related Posts

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

by சேரன்
05/10/2026
0

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

by சேரன்
05/10/2026
0

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

by சேரன்
02/10/2026
0

அன்பான உறவுகளுக்கு! இந்திய இலங்கை கூட்டுச்சதியில் ஆகுதியாகிய குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் அவர்களுடைய வித்துடல் தகனம் செய்யப்பட்ட வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில்...

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கத்தின் 89வது இரத்ததான நிகழ்வு

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கத்தின் 89வது இரத்ததான நிகழ்வு

by சேரன்
02/10/2026
0

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 89 வது இரத்ததான நிகழ்வானது 04/10/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் கணபதி மஹால் திருமண மண்டபம் நெடியகாடு வல்வெட்டித்துறையில் நடைபெறும். இந்த...

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை வல்வெட்டித்துறையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை வல்வெட்டித்துறையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

by சேரன்
24/09/2026
0

அதிபர் திரு. இ. சுதர்சன் அவர்களின் தலைமையில் தையல் பகர் அரங்கத்தில் நேற்று கௌரவிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த செல்வன்...

வல்வெட்டித்துறைச் சந்தியில் தியாக தீபம் திலீபன் ஊர்தி அஞ்சலி நிகழ்வு

வல்வெட்டித்துறைச் சந்தியில் தியாக தீபம் திலீபன் ஊர்தி அஞ்சலி நிகழ்வு

by சேரன்
24/09/2026
0

வல்வெட்டித்துறைச் சந்தியில் தியாக தீபம் திலீபனின் நினைவைப் போற்றும் வகையில் ஊர்தி அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு, திலீபனின் நினைவுக்கு...

Next Post
அவன் இவன்

அவன் இவன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.