Thursday, November 26, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home செய்திகள்

ஏன் இந்த வன்மம்… – ச.ச.முத்து.

by admin
10/11/2013
in செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

timthumb (1)அவர்கள் ஒருமுறைதான் கொன்றார்கள். ஆனால் ஏதோ காரணங்கள் சொல்லி சொல்லி நிதமும் கொல்வது  இருக்கிறதே அது கொலையாளிகளின் வன்மத்தைவிடவும கேவலமானது.

இசைப்பிரியாவை உயிருடன் சிங்கள மிலேச்சர்கள் பிடிப்பதுபோன்ற காணொளியை சனல்4 வெளியிட்ட நாளில் இருந்து மீண்டும் மீண்டும் அந்த பெண் எழுத்துக்களாலும் ஒளிப்படங்களாலும் கீறிக்கிழிக்கப்பட்டு பிரேதபரிசோதனை செய்வது இருக்கிறதே அது சிங்களராணுவத்தினரின் வன்மத்தைவிடவும் கொடியதாக தெரிகிறது.

சனல் 4 அந்த காணொளியை வெளியிட்டது எதற்காக?

இனப்படுகொலை அரசான சிங்களம் சொல்வதுபோல ஒரு இராணுவ நடவடிக்கையின்போது இசைப்பிரியா கொல்லப்படவில்லை. உயிருடன்,காயமெதும் இன்றி பிடிக்கப்பட்ட பின்னரே கொல்லப்பட்டுள்ளார் என்பதை வெளிக்காட்டுவதற்காகவேதான் அதனை வெளியிட்டார்கள்.

தமிழன் அல்லது தமிழச்சி என்ற காரணத்துக்காகவே, ஒரு இனரீதியான அழிப்புக்காகவே இந்த கொலைகள் நிகழ்த்தப்பட்டன என்பதை காட்டுவதற்காகவே சனல்4 இதனை வெளியிட்டார்கள்.

ஆனால் அதன் பின்னர் தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் நாம் அவள் மீது நடாத்தும் வன்மம் இருக்கிறதே அதுதான் புரியாமல் இருக்கிறது. ஏதோ சிங்களம் இப்போதான் தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்தை நடாத்துகின்றது என்பது தோற்றத்துடன் நாம் இருக்கின்றோம். உண்மையிலேயே தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் என்பது காலம் காலமாக சிங்களம் நிகழ்த்திவரும் ஒரு காட்டுமிராண்டித்தனமாகும். அது இன்று நேற்று தொடங்கியது அல்ல.

58 இனப்படுகொலை தொடங்கி, 83 யூலை இனப்படுகொலை என்று, 2009 முள்ளிவாய்க்கால் வரையும் தொடர்ந்ததுடன் நில்லாமல் இன்றைய தேதி வரைக்கும் இதுவே நடக்கின்றது. சிங்களம் மட்டுமல்லாமல் அமைதிப்படை என்ற பெயரில் வந்திறங்கி நின்ற காட்டுமிராண்டிகளும் அதனையே செய்தார்கள். இவர்கள் எல்லோரும் ஆயுதங்கள் துணையுடன் நிகழ்த்திய பாலியல் பலாத்காரத்துக்கு சற்றும் குறைவில்லாததாகவே நாம் இப்போது நடாத்தும் எழுத்துக்களும் ஒளிப்பட தரவேற்றங்களும் இருக்கின்றன.

அதனை அவர்கள் எப்படி செய்தார்கள், எத்தனைபோர் செய்தார்கள் என்ற எழுதுவது இருக்கிறதே, அது எந்த விதமான மனப்பிரள்வின் வெளிப்பாடு இது என்று புரியமாட்டேன் என்கிறது. எல்லாவிதமான உச்சங்களும் தொட்டுவிட்ட ஒரு மனிதன் இத்தகைய ஒரு பிரச்சனையில் எப்படி நடந்து கொண்டார் என்று தெரிந்து கொள்வதன் ஊடாக அனைவரும் தங்களுக்கு தாமே ஒருவிதமான தர்மக் கோட்டை கிழித்து அதனுள் இருந்து எழுதவும் ஒளிப்படம் பதிவேற்றவும் செய்தல் நல்லது என்பதற்காக அந்த சம்பவத்தை இதோ தருகின்றேன்.

தமிழீழத்தில் இந்தியபடைகளுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளும் இடையில் செறிவான யுத்தம் எல்லா அரங்குகளிலும் நடந்துகொண்டிருந்த காலமது. மிக கொடூரமான பாலியல் பலாத்காரங்களை இந்தியப்படை தமிழீழமெங்கும் கட்டவிழ்த்துவிட்டிருந்த காலமும்  அதுதான். அந்த நேரத்தில்  அமைப்பின் முக்கியமானவர்கள் சிலர் தமிழக முதல்வர் எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தனர். எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்களிடம் இந்தியப்படைகள் தமிழீழ பெண்கள் மீது நடாத்திவரும் படுகொலைகள் பற்றியும் பாலியல் பலாத்காரங்களை பற்றியும்  சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்களுடன் அந்த நேரத்தைய இந்திய பாராளுமன்ற உதவி சபாநாயகராக இருந்த தம்பித்துரை என்பவரும் இருந்தார். அவர் உடனே ‘இராணுவம் என்றால் இத்தகைய பாலியல் பலாத்காரம் இருக்கத்தான் செய்யும்’ என்ற தோரணையில்  பதிலளித்தார். அத்துடன் அந்த பாலியல் பலாத்காரங்கள் பற்றியும் தம்பித்துரை அவர்கள் அக்குவேறு ஆணிவேறாக துருவிதுருவி கொண்டிருந்தார். அவர்  பதிலளித்து ஒரு கணத்துக்குள் தமிழக முதல்வர் எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்கள் மிகவும் உக்கிரமான கோபத்துடன் தம்பித்துரை அவர்களை பார்த்து உடனே எழுந்து அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுமாறு உத்தரவிட்டார்.

எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்கள் கூறியதை தம்பித்துரை ஏற்காது விட்டிருந்தால் நிச்சயமாக எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்கள் அவரை பலவந்தமாக துரத்தியே இருப்பார். இது நடந்தது எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்கள் நோயின் உக்கிரத்தில் சாவுக்கு அண்மையில் இருந்த காலத்திலே. எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்களின் பேச்சுத்திறன் குறைந்து நோயின் தாக்கத்தால் அவரின் வாய் ஒரு பக்கமாக இழுபட்டிருந்த நிலையிலும் பாலியல் பலாத்காரம் பற்றி துருவிதுருவி தம்பித்துரை விசாரித்ததை பொறுக்க முடியாமல் எம்.ஜி  ராமச்சந்திரன் அவர்கள் காட்டிய அந்த கோபத்தை போன்றதொரு கோபத்தை அதற்கு முன்னர் ஒருபோதும் தாம் கண்டிருக்கவில்லை என்று அவர்களின் உதவியாளர்கள் அதன்பின் கூறினார்களாம்.

ஆனால் நாமோ நடந்துகொண்டிருக்கும் கொடூரங்களை பார்த்து குமுறி எழுவதற்கு பதிலாக அந்த கொடூரங்கள் எப்படி நடந்தன… அந்த தருணம் எப்படி.. என்ற பிரேத பரிசோதனைகளை கேவலமாக நடாத்தி கொண்டிருக்கிறோம். எப்போதோ நடந்த 58 கலவரத்தில் தனது கணவனை சிங்கள இனப்படுகொலையாளிகளிடம் பறிகொடுத்த பாணந்துறை கோவில் அர்ச்சகரின் மனைவியின் நிலையை கண்டதுதான் தன்னை இந்த போராட்ட களத்துக்கு கொண்டுவந்ததாக சொல்லிய தேசியத் தலைவனின் அந்த கோபத்தில் லட்சத்தில் ஒரு வீதம் தன்னும் இப்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை பார்த்து எமக்கு சிங்களத்தின் மீது வரவேண்டும். அதனை ஏற்படுத்துவதற்காகவே அனைவரும் எழுதவும் பேசவும் ஒளிப்படம் வெளியிடவும் வேண்டும்.

சிங்களம் ஒருபோதும் மாறப்போவதே இல்லை. அது 58ல் செய்ததையே 77லும் 83லும் 2009லும் ஏன் இன்றுவரையும் செய்து வருகின்றது. இனியும் அதனையே செய்யும். அது கொன்றுவீசிய உடல்களை நாமும் மீண்டும் குத்தி குதறிக் கொண்டிருக்காமல் எப்படி இவற்றை தடுத்து நிறுத்துவது என்பதை எழுதவேண்டும். எப்படி இதனை சர்வதேச அரங்கில் எழுப்பவேண்டும் என்பதை பதிய வேண்டும்.

அதுதான் உண்மையான விடுதலைக்கான வேலையாகும்.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

by சேரன்
23/09/2026
0

AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

by சேரன்
13/09/2026
0

கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கியப் பொறுப்பு ஈழத் தமிழர் விஜய் தனிகாசலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில்...

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

by சேரன்
31/08/2026
0

ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ நிகழ்வு வலுப்பெற்று வரும் நிலையில், அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக புதிய...

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

by சேரன்
30/08/2026
0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. புதிய விலைகள் ஆகஸ்ட் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன்படி, ஒக்டேன் 92...

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

by சேரன்
29/08/2026
0

யாழ்ப்பாணம் – மணற்காட்டுப் பகுதியில் நேற்று (28.08.2026) விஷமிகளால் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தீ, இன்று சனிக்கிழமை (29.08.2026) இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது....

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

by சேரன்
27/08/2026
0

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 1,300-க்கும் மேற்பட்டோர்...

Next Post
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தின் (வல்வை) அறிவித்தல்!

வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தின் (வல்வை) அறிவித்தல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

வீரவணக்கம் ஐயா! ம. க. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

15/11/2026
திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

திரு. சபாரத்தினம் ஞானமூர்த்தி அவர்கள் காலமானார்

20/10/2026
திரு அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) – மரண அறிவித்தல்

திரு அமரர் திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை (கவிஞன்) – மரண அறிவித்தல்

11/11/2026
வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

16/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.