Sunday, October 25, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home வல்வை செய்திகள்

ஒன்பது கின்னஸ் சாதனை படைத்த ஆழிக்குமரன் ஆனந்தனை நினைத்ததுன்டா?

by admin
03/02/2013
in வல்வை செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் அதாவது ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார். ஒன்பது உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த நீச்சல் வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன், பாக்கு நீரிணையை ஒரே தடவையில் நீந்திக் கடந்தார் ஆனந்தன்.

1971 ஆம் ஆண்டில் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார்.

அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் இவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.

சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்.

ஆழிக்குமரன் ஆனந்தன் படைத்த ஒன்பது கின்னஸ் சாதனைகளும் பின்வருமாறு,

சாதனை 1) 1971 ஆம் ஆண்டில் பாக்கு நீரிணையை 51 மணி நேரத்தில் நீந்திக் கடந்தது,

சாதனை 2) 1978 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 128 மணி நேரம் Twist Dance (60 களில் பிரசித்தி பெற்ற ஒரு வகை நடனம்) ஆடியது,

சாதனை 3) 1979 ஆம் ஆண்டில் 1487 மைல் தூரத்தை 187 மணி நேரத்தில் இரு சக்கர வாகனம் மூலம் இடைவிடாது ஓடி முடித்தமை,

சாதனை 4) 1979 ஆம் ஆண்டில் 33 மணி நேரம் ஒற்றைக் காலில் நின்றமை,

சாதனை 5) 1979 ஆம் ஆண்டில் 136 மணி நேரம் Ball Punching செய்தமை,

சாதனை 6) 1980 ஆம் ஆண்டில் 2 நிமிட நேரத்தில் 165 தடவைகள் குந்தி எழுந்தது (Sit-ups),

சாதனை 7) 1980 ஆம் ஆண்டில் 9100 தடவைகள் High Kicks செய்தமை,

சாதனை 8) 1981 ஆம் ஆண்டில் 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் இடைவிடாது நடந்து கடந்தமை,

சாதனை 9) 1981 ஆம் ஆண்டில் 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் (சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில்) செங்குத்தாக நின்றமை.

மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றின் விளைவால் இவரது மண்ணீரலை அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை. இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார்.

ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியின்போது 06 மணி நேர துணிகர முயற்சியின் பின், வலுவான சாதகம் அற்ற நீரோட்டத்தாலும் , நீரின் குறைந்த வெப்ப நிலையாலும் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின்போதே மரணத்தையும் தழுவிக் கொண்டார்.

‘குளிர்ந்த கடலே கவலை தருகிறது, அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை’ என்று சாதனை முயற்சியின்போது இவர் தெரிவித்தார்.

இதுதான் அவர் 1984 ஆம் ஆண்டு ஓகஸ்து 06 ஆம் திகதி ஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சியின்போது இறக்கும் முன்னர் கூறிய கடைசி வார்த்தை.

ஆழிக்குமரன் ஆனந்தன் கின்னஸ் சாதனைகளைப் படைத்தது மட்டுமன்றி, இலண்டன் பல்கலை கழகத்தில் விஞ்ஞான பட்டதாரி பட்டத்தையும் இலங்கையில் சட்டமானிப் பட்டத்தையும் பெற்று கல்வியிலும் சிறந்து விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

by சேரன்
16/10/2026
0

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

by சேரன்
05/10/2026
0

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

by சேரன்
05/10/2026
0

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

by சேரன்
02/10/2026
0

அன்பான உறவுகளுக்கு! இந்திய இலங்கை கூட்டுச்சதியில் ஆகுதியாகிய குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் அவர்களுடைய வித்துடல் தகனம் செய்யப்பட்ட வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில்...

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கத்தின் 89வது இரத்ததான நிகழ்வு

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கத்தின் 89வது இரத்ததான நிகழ்வு

by சேரன்
02/10/2026
0

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 89 வது இரத்ததான நிகழ்வானது 04/10/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் கணபதி மஹால் திருமண மண்டபம் நெடியகாடு வல்வெட்டித்துறையில் நடைபெறும். இந்த...

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை வல்வெட்டித்துறையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை வல்வெட்டித்துறையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

by சேரன்
24/09/2026
0

அதிபர் திரு. இ. சுதர்சன் அவர்களின் தலைமையில் தையல் பகர் அரங்கத்தில் நேற்று கௌரவிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த செல்வன்...

Next Post
சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரம்

சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.