உலகெங்கும் பரந்து வாழும் வல்வை மக்கள் ஒன்று திரண்டு வல்வை முத்துமாரி அம்மனை தரிசிக்க இங்கு வருகை தந்திருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் தாங்கள் கல்வி கற்ற சிதம்பராக்கல்லூரியை பார்வையிட பழைய மாணவர் தாய் சங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தது. வட மாகாணத்தில் முதல் தரமாக அமைந்துள்ள விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பௌதீக வளங்கள் கணணி வலையமைப்பு இணையதளம் மின்பிறப்பாக்கி அவற்றின் பயன்பாட்டை நேரடியாக பார்வையிட்டனர்.





















