Saturday, October 24, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home செய்திகள்

செங்கல்பட்டில் காலவரையின்றி தொடரும் பட்டினிப் போராட்டம்.(படங்கள்)

by admin
06/01/2013
in செய்திகள், வல்வை செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகம் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் கடந்த மாதம் 23 ஆம் தேதியில் இருந்து 23 ஈழத் தமிழர்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உடல் நிலை மோசமான காரணத்தால் அதில் 12 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையிலும் அவர்கள் உண்ணா நிலை போராட்டத்தை தொடர்கின்றனர்.

மீதமுள்ளவர்கள் சிறப்பு முகாமில் தொடர்ந்து உண்ணா நிலையில் உள்ளனர்.

தமிழக அரசும் போராட்டத்தில் உள்ள ஈழத் தமிழர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

போராட்டம் தொடங்கிய பின் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ நெடுமாறன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா ஆகியோர் மருத்துவமனை சென்று சிகிச்சையில் உள்ள சிறப்பு முகாம் ஈழத்தமிழர்களை சந்தித்துள்ளனர்.

அதன் பின்பு அரசும் சற்று தங்கள் நிலையை தளர்த்தி ஐந்து ஈழத் தமிழர்களை விடுதலை செய்த சம்மதித்துள்ளது.

இதன்படி செல்வம், செல்வராஜா, ரமேஷ், ஜெயபாலன், ரைசுதீன் ஆகியோர்கள் விடுதலை ஆகிறார்கள்.

இவர்களை அரசு விடுதலை செய்தாலும் உண்ணா நிலையில் உள்ளவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை.

காரணம் சென்ற காலங்களில் அரசு 45 நாட்களுக்கு ஒரு முறை ஐந்து நபர்களை விடுதலை செய்து வந்தது.

இப்போது 90 நாட்கள் ஆகியும் யாரையும் விடுதலை செய்யவில்லை என்பதால் தான் முகாம் வாசிகள் போராட்டாம் நடத்தினார்கள்.

அரசு தற்போது 90 நாட்கள் கழித்து ஐந்து பேர்களை விடுதலை செய்வதை ஏற்க முடியாது, 10 பேர்களையாவது தற்போது விடுதலை செய்ய வேண்டும் எனவும் வருங்காலத்தில் வழமை போலவே 45 நாட்களுக்கு ஒரு முறை ஐந்து பேர்களை விடுதலை செய்ய அரசு உறுதி அளிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் கூறியுள்ளனர்.

மேலும் உலகத் தமிழர்களுக்கு முகாம் வாசிகள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது,

தமிழ் நாட்டில் வாழும் ஈழ அகதிகள் விடுதலை அடைய உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் அந்தந்த நாடுகளின் இந்திய தூதரகங்களில் தங்கள் கண்டன அறிக்கையை சமர்பிப்பதுடன், பல வகையான போராட்ட முன்னெடுப்புகளை எடுக்குமாறு வேண்டுகிறோம் என்று கூறியுள்ளனர்.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

வடக்கு மாகாண மட்டப் பரதநாட்டியப் போட்டியில் வல்வை சிவகுரு வித்தி. மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை!

by சேரன்
16/10/2026
0

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டி – வலய மட்டம் 2026: யா/வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு இரு பிரிவுகளில் சிறப்பிடம்

by சேரன்
05/10/2026
0

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

by சேரன்
05/10/2026
0

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

by சேரன்
02/10/2026
0

அன்பான உறவுகளுக்கு! இந்திய இலங்கை கூட்டுச்சதியில் ஆகுதியாகிய குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் அவர்களுடைய வித்துடல் தகனம் செய்யப்பட்ட வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில்...

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கத்தின் 89வது இரத்ததான நிகழ்வு

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கத்தின் 89வது இரத்ததான நிகழ்வு

by சேரன்
02/10/2026
0

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 89 வது இரத்ததான நிகழ்வானது 04/10/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் கணபதி மஹால் திருமண மண்டபம் நெடியகாடு வல்வெட்டித்துறையில் நடைபெறும். இந்த...

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை வல்வெட்டித்துறையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை வல்வெட்டித்துறையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

by சேரன்
24/09/2026
0

அதிபர் திரு. இ. சுதர்சன் அவர்களின் தலைமையில் தையல் பகர் அரங்கத்தில் நேற்று கௌரவிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த செல்வன்...

Next Post

ஈராக் தொடர் குண்டு வெடிப்பில் 22 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.