பிரிட்டன் சமீபகாலமாக பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இதனால் பெரும் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் ராணுவத்துக்காக 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு வருகிறது.
இந்த தொகையை ஒதுக்கவே அரசு பெரும் சிரமப்பட்டு வருகிறது. எனவே ராணுவ செலவுகளை குறைக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
இதற்காக ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்க திட்டமிட்டுள்ளன. அடுத்த 10 ஆண்டில் 38 ஆயிரம் வீரர்களை குறைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
தற்போது ராணுவத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். வீரர்கள் குறைப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு 5300 பேர் வீட்டுக்கு அனுப்பபடுகிறார்கள்.
முதல்கட்டமாக மருத்துவ பிரிவு, பல் மருத்துவ பிரிவு மற்றும் சேவை பிரிவுகளில் பெருமளவு வீரர்களை குறைக்க திட்டமிட்டுள்ளனர்.
ராணுவ பட்ஜெட்டை இனி 2 லட்சது 80 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகரிக்க கூடாது என்றும் முடிவு எடுத்துள்ளனர்.











