Tuesday, October 13, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home கலைப்படைப்புகள்

பிரிட்டனில் ஏலத்துக்கு வரும் அனுராதபுர காலத்து சந்திரவட்டக்கல்

by admin
28/01/2013
in கலைப்படைப்புகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டனைத் தளமாகக் கொண்ட பிரபல போன்ஹாம்ஸ் தனியார் நிறுவனத்தினால் ஏலத்தில் விடப்படுகின்ற இலங்கையின் அனுராதபுர-காலத்தைச் சேர்ந்த சந்திரவட்டக்கல்லை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இலங்கை தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தின் தலைமை இயக்குநர் கலாநிதி செனரத் திசாநாயக்க பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

கிட்டத்தட்ட 1300 ஆண்டுகள் பழமையான இந்த சந்திரவட்டக்கல் பிரிட்டன் பணத்தில் 50 ஆயிரம் பவுண்டுகள் வரை (இலங்கைப் பெறுமதியில் சுமார் ஒரு கோடி ரூபா) பெறுமதியானது என்று பிரிட்டிஷ் பத்திரிகையொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு தொன் எடையும் 8 அடி நீளமும் கொண்ட கிரானைட் கருங்கல்லால் ஆன இந்த கல் 1950களில் தேயிலைத் தோட்ட முதலாளி ஒருவரால் பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக போன்ஹாம்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இதேவேளை, அனுராதபுர வரலாற்று பாரம்பரிய பிரதேசத்தில் 1890-களில் இருந்தே தொல்பொருள் ஆய்வுகள் நடந்துவருவதாகவும் அங்கிருந்து சந்திரவட்டக்கல் ஒன்று காணாமல்போயிருப்பதற்கான பதிவுகள் எதுவும் தம்மி்டம் இல்லை எனவும் இலங்கை தொல்பொருள் ஆய்வுத் துறை தலைமை இயக்குநர் செனரத் திசாநாயக்க தமிழோசையிடம் தெரிவித்தார்.

அனுராதபுர காலத்தைச் சேர்ந்த 8 சந்திரவட்டக்கற்கள் தம்மால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தக் கல் தொடர்பான எந்தவொரு பதிவும் தம்மிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.

பிரிட்டனில் இருக்கின்ற கல் தொடர்பில் இலங்கைத் தூதரகம் ஆராய்ந்து பார்ப்பதாகவும் உண்மையான சந்திரவட்டக்கல் என்று உறுதிப்படுத்தப்பட்டால் அதனை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் செனரத் திசாநாயக்க தெரிவித்தார்.

அனுராதபுர இராசதானிக் காலத்தில் (கி.மு. 400- கி.பி.1017 வரையான காலம்) அமைந்த விகாரைகளின் நுழைவாயிலில் கருங்கல்லால் அமைந்த மிகப்பெரிய படிக்கல்லே சந்திரவட்டக்கல்; குதிரை, சிங்கம், யானை போன்ற மிருகங்கள் மற்றும் சில பறவைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கும் அந்தக் கற்கள் பௌத்தக் கட்டடக் கலையில் மிகவும் பிரபல்யம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் காலனித்துவக் காலத்தில் இலங்கையிலிருந்து பல்வேறு தொல்பொருட்கள் வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் அவை இன்று லண்டன், பொஸ்டன் மற்றும் பல வெளிநாட்டு நகரங்களில் இருப்பதாகவும் தொல்பொருள் ஆய்வுத் துறை தலைவர் கூறினார்.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

எல்லாருமே கெட்டவர்கள்தான் !

எல்லாருமே கெட்டவர்கள்தான் !

by admin
08/10/2016
0

முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான...

வல்வை மு.ஆ.சுமன் கவிதைகள்

வல்வை மு.ஆ.சுமன் கவிதைகள்

by admin
07/10/2016
0

ஈழத்தின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் மு.ஆ.சுமன் தற்போது இங்கிலாந்து தேசத்தில் வசித்து வருகிறார். கவிதை எழுதுவதோடு மட்டுமல்லாது நடிப்புத் துறையிலும் தன்னை நிலைநிறுத்தி வரும் வல்வை சுமன் அவர்கள்,...

என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப்  புழுதியில் யார் எறிந்தார்!!!

என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப் புழுதியில் யார் எறிந்தார்!!!

by admin
01/03/2015
0

                        என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப் புழுதியில் யார்...

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும், இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளின் விவரணச் சித்திரங்களை ஆவணமாக்கிய வல்வை.ஆனந்தன்; அவர்களினால் ஆக்கப்பட்ட இரண்டு நூல்களின் வெளியீடு 08.02.2015 (படங்கள் இணைப்பு)

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும், இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளின் விவரணச் சித்திரங்களை ஆவணமாக்கிய வல்வை.ஆனந்தன்; அவர்களினால் ஆக்கப்பட்ட இரண்டு நூல்களின் வெளியீடு 08.02.2015 (படங்கள் இணைப்பு)

by admin
10/02/2015
0

08.02.205 ஞாயிறு மாலை அய்யப்பன் கோயில் அரங்கில் வல்வை ஆனந்தன் (நடராஜா ஆனந்தராஜ் - முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் ) எழுதிய இரண்டு நூல் வெளியீட்டு...

பிரான்ஸ் வல்வை நலன்புரிச்சங்க ஆதரவுடன், பிரான்ஸில் வல்வையரின் படைப்பான உயிர்வரை இனித்தாய் சிறப்புக்காட்சி

பிரான்ஸ் வல்வை நலன்புரிச்சங்க ஆதரவுடன், பிரான்ஸில் வல்வையரின் படைப்பான உயிர்வரை இனித்தாய் சிறப்புக்காட்சி

by admin
22/07/2014
0

கூலி (வெட்டி பிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் சுற்றுவரை முன்னேறி பரிசைத்தவறவிட்ட சிறுகதை.)

கூலி (வெட்டி பிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் சுற்றுவரை முன்னேறி பரிசைத்தவறவிட்ட சிறுகதை.)

by admin
14/02/2014
0

Next Post

வலி சுமக்கும் மனது...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.