Wednesday, October 14, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home கட்டுரைகள்

வலி சுமக்கும் மனது…

by admin
28/01/2013
in கட்டுரைகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஓடம் புரளப் போவதறியாமல்

தலைகீழாய்

கைவீசி களித்திருந்த நாட்கள்

பறிபோயாச்சு…

கண்ணீர் தானிப்போ

எங்கள் வாழ்க்கையாயிற்று

எந்தத் தோள்களும் தயாராக இல்லை

எங்கள் வலிகளை

தாங்கவும், இறக்கி வைக்கவும்

ஆறுதல் கூற யாருக்கும்

வார்த்தைகள் வருவதுமில்லை

நறுமணமாய் மோதும் முன்னைய ஞாபக

குவியல்களும்

நிகழ்கால வலிகளின்

முனகல்களுமே

எங்கள் வாழ்க்கையாய் போனது

முகாரிகளினாலும் பாடமுடியாத

உறைபனியின் முகடுகளிலும் கரையாத

எம் வலியின் உணர்வுகளை

முக்காடு போட்டு

மறைத்துக்கொள்ள முயன்றாலும்

பொத்துக் கொண்டு வெளிவருகின்றது

சப்தமின்றி மனதுக்குள்

சத்தியங்கள் செய்திட்ட போதிலும்

நடந்து வந்த பாதையை ஏனோ

மனம் தயங்குகின்றது மறக்க

வருங்காலம் எப்படி விடியுமென்று தெரியாமல்

இருளுக்குப் பழக்கப்பட முயன்றால்

விழிகள் விசமம் செய்கின்றன

இமையோரம் எட்டிப் பார்க்கும்

உவர் நீர்pன் துணை கொண்டு

உள்ளேயிருந்து ஒரு மூச்சை

தள்ளி வருகின்றன பெருமூச்சாய்

மலர் தேடியோடும் பட்டாம்பூச்சியின்

இறக்கை பிய்த்து எறியப்பட்டதாய்

தத்தித் திரியும் தும்பியை

துண்டுகளாக்கப்பட்டதாய்

மனதின் கனமான வலி மட்டும்

கணம் தோறும் கூடும்

எதை இழந்த போதிலும்

நம்பிக்கை ஒன்றே

கைகொடுக்குமென்று நம்பி

காத்திருக்கின்றோம்

எதிர்காலத்தை  நோக்கி…

Share this on WhatsApp
admin

admin

Related Posts

பாக்கு நீரனையை முதன் முதலில் நீந்திக் கடந்து சாதனை புரிந்த மறத்தமிழனுக்கு நினைவுச் சிலை திறப்புவிழா 25.03.2015

பாக்கு நீரனையை முதன் முதலில் நீந்திக் கடந்து சாதனை புரிந்த மறத்தமிழனுக்கு நினைவுச் சிலை திறப்புவிழா 25.03.2015

by admin
23/03/2015
0

பகவான் செய்த நவரத்தின மாலை!

பகவான் செய்த நவரத்தின மாலை!

by admin
04/11/2014
0

பகவான் செய்த நவரத்தின மாலை! திரிலோசனதாசர் ஒரு பொற்கொல்லர். சிறு கிராமம் ஒன்றில் வசித்த அவர், கிருஷ்ண பரமாத்மாவிடம் ஆத்மார்த்தமான பக்தி கொண்டு, தினந்தோறும் ஸ்ரீகிருஷ்ண னுக்கு...

இன்றைய நாளில் சாதனை படைத்த- நீச்சல் வீரன் நவரத்தினசாமி அவர்களது கடல் கடந்த சாதனை (25.03.2014)

இன்றைய நாளில் சாதனை படைத்த- நீச்சல் வீரன் நவரத்தினசாமி அவர்களது கடல் கடந்த சாதனை (25.03.2014)

by admin
25/03/2017
0

மாகாணசபை அதிகாரங்களும் மகாநாயக்க தேரரின் விளக்கங்களும்!- இதயச்சந்திரன்

மாகாணசபை அதிகாரங்களும் மகாநாயக்க தேரரின் விளக்கங்களும்!- இதயச்சந்திரன்

by admin
30/05/2013
0

நாடாளுமன்றைத்தைவிட நாலாவது மாடிக்கே, தமிழ் அரசியல்வாதிகள் அடிக்கடி செல்கின்றார்கள். இதில் அதிக தடவைகள் நாலாவது மாடிக்கு அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி யார் என்று கேட்டால், அது நிற்சயமாக...

அமெரிக்கத் தீர்மானமும் ஈழத்தமிழர்களும்! பார்த்தீபன்-

அமெரிக்கத் தீர்மானமும் ஈழத்தமிழர்களும்! பார்த்தீபன்-

by admin
06/04/2013
0

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப்போர் முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிவுரும் நிலையில் ஐய்க்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில், இந்த ஆண்டும் அமெரிக்கா...

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் தமிழர்களும் – நிலாந்தன்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் தமிழர்களும் – நிலாந்தன்

by admin
31/03/2013
0

அமெரிக்காவுக்கோ, மேற்கு நாடுகளுக்கோ ஈழத்தமிழர்கள் மீது காதல் கிடையாது. அவர்களுக்கென்று நீண்ட கால நோக்கிலான ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. அந்த நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்ட ஒரு...

Next Post

நாம் தமிழர் கருத்தரங்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.