Sunday, October 11, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home பிரித்தானியா செய்திகள்

பிலிப்பைன்சில் இன்று பயங்கர நிலநடுக்கம்: 20 பேர் பலி – 33 பேர் படுகாயம்

by admin
15/10/2013
in பிரித்தானியா செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள பாரிய பூமியதிர்ச்சி காரணமாக குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் காயமடைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் பொஹோல் தீவில் உள்ள கார்மன் நகரை மையமாகக் கொண்டு இன்று காலை 8.12 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தாகவும், 56 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து செபு நகர் அருகில் உள்ள மீன் துறைமுகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். மேலும் செபு மாகாணத்தில் மார்க்கெட்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர் மற்றும் 19 பேர் காயம் அடைந்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். செபுவில் 2 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் இருந்து 8 மாத குழந்தை உள்பட 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தக்பிலாபன் பகுதியில் உள்ள ஒரு தேவாலயம் சேதம் அடைந்துள்ளது. மேலும் நகரில் உள்ள மஹால் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம் அடைந்தார். மேலும் கார்மனின் தென்மேற்கு பகுதியில் உள்ள லோபோக் நகரில் இருக்கும் 17வது நூற்றாண்டு தேவாலயம் இடிந்து விழுந்தது.

இது தவிர அப்பகுதியில் உள்ள பல பழைய தேவாலயங்கள் சேதம் அடைந்துள்ளன. இன்று பிலிப்பைன்ஸில் தேசிய விடுமுறை என்பதால் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

மத்திய பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள பாரிய பூமியதிர்ச்சி காரணமாக குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் காயமடைந்துள்ளனர்.

சுற்றுலாவுக்கு  பிரசித்தி பெற்ற இடமான போஹோல் தீவில் இந்த பூமியதிர்ச்சி நிலத்திற்கு அடியில்  ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போஹோல் தீவில் கட்டிடங்களும் சந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பூமியதிர்ச்சி காரணமாக கட்டிடங்களும தேவாலயங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக சுனாமி பேரலை ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுவதாக பசுபிக் சுனாமி கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

by சேரன்
23/09/2026
0

AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...

லண்டன் மோர்டனில் சித்தர்கள் மற்றும் ஆன்மிகம் தொடர்பான நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

லண்டன் மோர்டனில் சித்தர்கள் மற்றும் ஆன்மிகம் தொடர்பான நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

by சேரன்
11/09/2026
0

சித்தர்கள் மற்றும் ஆன்மிகம் தொடர்பான நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் “சந்தியில் சித்தர்கள்”, “சந்திரியின் அறிமுகங்கள் பாகம் – 10”,...

A LEVEL AND GCSE TUITION  IN MITCHAM AND SURROUNDING AREA

A LEVEL AND GCSE TUITION IN MITCHAM AND SURROUNDING AREA

by admin
16/10/2015
0

பிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள் 14.01.2015

பிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள் 14.01.2015

by admin
23/01/2015
0

13.01.2015 அன்பான பிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள், பிரித்தானியாவை தளமாகக்...

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தீவிரவாதிகள் தாக்குதல் 12 பேர் உயிரிழப்பு (காணொளி இணைப்பு )

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தீவிரவாதிகள் தாக்குதல் 12 பேர் உயிரிழப்பு (காணொளி இணைப்பு )

by admin
07/01/2015
0

பிரான்ஸ் சார்லி ஹெப்டோ ஆன்லைன் வார இதழ் தலைமை அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் செய்து வெளியிட்ட அலுவலகம் மீது...

பிரிட்டனையும் தாக்கிய எபோலா வைரஸ்

பிரிட்டனையும் தாக்கிய எபோலா வைரஸ்

by admin
01/01/2015
0

ஆப்ரிக்க நாட்டில் இருந்து ஸ்காட்லாந்து வந்த பெண் ஒருவருக்கு எபோலா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய எபோலா வைரஸ்,...

Next Post

கூகுள் கிளாசுக்கு சவால் விடும் வகையில் அறிமுகமாகும் ION கிளாஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.