Wednesday, October 14, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home அறிவியல்

புதிய ‘குவஸார்’ மண்டலங்கள் அடங்கிய பகுதி கண்டுபிடிப்பு

by admin
12/02/2013
in அறிவியல்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
அண்டவெளியில் நாம் இதுவரை கண்டிராத அளவுக்கு ஒரு மாபெரும் ‘குவஸார்’ மண்டலங்கள் அடங்கிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நாசா அறிவித்துள்ளது. இதை ஒளியின் வேகத்தில் கடக்க 4 பில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். அந்த அளவுக்கு மாபெரும் அளவில் பரந்து விரிந்து கிடக்கிறது இந்த மண்டலம். இந்த ‘குவஸார்’ மண்டலம் என்.ஜீ.சீ.6872 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.
Quasi-stellar radio source (“quasar”) என்பது தான் ‘குவஸார்’. ஒரு நட்சத்திர மண்டலத்தின் (galaxy)மையக் கருவை அடங்கிய நட்சத்திரம் தான் குவஸார். பல்லாயிரம் சூரியன்களை விட அதிக கனமும் ஒளிவீச்சும் கொண்டவை குவஸார்கள். நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் உள்ள மாபெரும் பிளாக்ஹோலை சூழ்ந்துள்ள இந்த குவஸார்கள் பிளாக்ஹோலில் உள்ள ஆற்றலைத் தான் ஒளியாக, மின்காந்த அலைகளாக வானில் பல பில்லியன் கிலோ மீற்றத் தூரத்துக்கு பீய்ச்சி அடிக்கின்றன.
இந்நிலையிலேயே இதுவரையில் காணப்படாத அளவுக்கு மாபெரும் ‘குவஸார்கள்’ அடங்கிய ஒரு மண்டலத்தை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Large quasar group (LQG)எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மண்டலத்தை கடக்கவே 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகிவிடுமாம். ஒளியின் வேகம் என்பது வினாடிக்கு 186,282 மைல்கள் அல்லது 3,00,000 கிலோ மீற்றர்கள். நமது சூரியனிலிருந்து புறப்படும் ஒளி பூமியை அடைய 8 நிமிடங்கள் ஆகின்றன. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான 1,50,000,000 கிலோ மீற்றர் தூரத்தைக் கடக்க இவ்வளவு நேரம் ஆகிறது.
நமது பூமி, சூரியன் உள்ளிட்ட நட்சத்திர மண்டலம் இருப்பது மில்கிவே கெலக்ஸி எனப்படும் பால்வெளி மண்டலம். இதற்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு மண்டலம் ஆண்ட்ரோமெடா கெலக்ஸி. இந்த இரு மண்டலங்களுக்கும் இடையிலான தூரம் 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள். அதாவது நாம் ஒரு விண்கலத்தில் ஒளியின் வேகத்தில் பறந்தால் மில்கிவே கேலக்ஸியிலிருந்து ஆண்ட்ரோமெடா கேலக்ஸியை அடைய 2.5 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.
வழமையாக இருவேறு நட்சத்திர மண்டலங்களுக்கு இடையிலான தூரம் 6 முதல் 10 மில்லியன் ஒளி ஆண்டுகளாக இருக்கும். ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குவஸார் மண்டலத்தின் விட்டம் 4 பில்லியன் ஆண்டுகள். அந்தளவுக்கு இந்த மண்டலம் பெரியதாக உள்ளதாம்.
இந்த மாபெரும் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இதுவரையிலும் நாம் விண்வெளி குறித்து வைத்திருந்த மாதிரிகள் கணக்கீடுகள் அனைத்தும் துவம்சமாகியுள்ளன. குறிப்பாக எல்பர்ட் ஐன்ஸ்டீனின் அண்டவியல் கொள்கையை (Cosmological Principle) இது கேள்விக்குறியாக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அண்டத்தை எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் அது ஒரேமாதிரியாகவே இருக்கும் என்பது இந்தக் கொள்கையின் சாரம்சம். ஆனால், இந்த மாபெரும் மண்டலம், அந்தக் கொள்கையை சிதைக்கிறது. இதனால் இந்த புதிய மாபெரும் ‘குவஸார்’ மண்டலம், அண்டம் குறித்த கொள்கைகளை, சித்தாந்தங்களை உலுக்கும் என்கிறார்கள் இங்கிலாந்தின் ரோயல் அஸ்ட்ரனாமிகல் சொசைட்டி விஞ்ஞானிகள்.
Share this on WhatsApp
admin

admin

Related Posts

வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல் 2019

by admin
25/08/2019
0

வல்வை சிவகுருவித்தியாசாலை பரிசளிப்புவிழா 2018

வல்வை சிவகுருவித்தியாசாலை பரிசளிப்புவிழா 2018

by admin
19/09/2018
0

இறுதிக் கிரியை பற்றிய விபரம் -திரு கந்தையா மகாலிங்கம்

இறுதிக் கிரியை பற்றிய விபரம் -திரு கந்தையா மகாலிங்கம்

by admin
14/02/2017
0

   

மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம்.

மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம்.

by admin
02/04/2016
0

மரண அறிவித்தல்: திருமதி பார்வதிதேவி பாலசுப்பிரமணியம்.                              ...

வல்வை மக்களின் கவனத்திற்கு  வல்வை மாணவர்களின் வளர்ச்சிக்கு சொந்தமான இடம் தேவை

வல்வை மக்களின் கவனத்திற்கு வல்வை மாணவர்களின் வளர்ச்சிக்கு சொந்தமான இடம் தேவை

by admin
22/07/2015
0

http://www.vvtuk.com/wp-content/uploads/2015/07/Request-Land-Valvai-PEOPLE-1-11.pdf

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சூரியன் மறைவதில் சர்ச்சையா…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சூரியன் மறைவதில் சர்ச்சையா…

by admin
08/12/2014
0

இந்த படத்தை எடுக்கும் போது நான் ஆச்சரிய பட்ட விடயம். இது வழக்கமான சூரியன் மறையும் படம் தானே. ஆனால் இதில் என்ன விந்தை இருக்கிறது என...

Next Post
ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்குத் தயாராகும் புலத்து மக்கள்!

ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்குத் தயாராகும் புலத்து மக்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.