முரளி.மாலதி முதலாவது ஆசிய யோகா போட்டி இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெற்றது.இப் போட்டியின் முதல் நிகழ்வாக “உலக சாதனை” ஒன்று நடைபெற்றது.யோக ஆசனங்களில் ஒன்றான “உட்கட்டாசனம் ” 121 நபர்கள் கலந்து கொண்டு 5நிமி40 செக்கன்கள் செய்து உலக சாதனை செய்தனர்.இந்நிகழ்வில் பங்குபற்றி உலக சாதனையாளர் விருதினையும், 51-60 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதலிடத்தை பெற்று தங்க பதக்கத்தினையும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிரிவுகளிலும் அதிக புள்ளிகள் பெற்றவர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று சிறந்த வெற்றியாளராக (Champion of Champion) தெரிவு செய்யப்பட்டார்.

















