உலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியபோதும் மனிதனை கடவுளால் மட்டுமே படைக்க முடியும் என்ற நியதியையும் மாற்றி, செயற்கை மனிதனையும் தயாரித்து சாதனை படைத்து இருக்கிறார்கள். பிரிட்டனில் உள்ள 18 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து செயற்கை மனிதனை படைத்துள்ளனர்.ரத்தம், சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், கை, கால், கண்கள் போன்றவை அனைத்தும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது.
கண்கள், இதயம், நுரையீரல்கள் போன்ற உறுப்புகள் கணனி சிப்களுடன் இணைக்கப்பட்டு இதன்மூலம் அவை இயக்கப்படுகின்றன.இந்த செயற்கை மனிதனை உருவாக்க ரூ.5.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த செயற்கை மனிதன் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கிறான். வருகிற மார்ச் 11ம் திகதி வரை அவனை பொதுமக்கள் பார்த்து மகிழலாம்.செயற்கை மனிதனின் சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலும், செயற்கை நுரையீரல்கள், ஸ்வாசீன் பல்கலைக்கழகத்திலும் உருவாக்கப்பட்டவை என்பது
குறிப்பிடத்தக்கது.
ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிக வேகம் செல்லும் நவீன ரக விமானம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் மூலம் உலகின் ஒரு மூலையில்...
ரிமோட் கன்ரோலர்களையும் தாண்டி கை அசைவுகளின் மூலம் தொலைக்காட்சிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய புதிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Onecue எனும் இச்சாதனம் மூலம் தொலைக்காட்சிகள் தவிர Cable...
சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக சுமார் 10 ஆண்டுகள் பயணித்த பின்னர், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் , விண்கலன் ரொசெட்டாவின் ஆய்வுக்கலனான, பிலே கலன், வால் நட்சத்திரத்தின்...
நனோ தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி குண்டுகளை கண்டுபிடிக்கும் சாதனத்தை Utah பல்கலைக்கழக பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். விரிவுரையாளர் Ling Zang தலைமையிலான குழுவினால் உருவாக்கப்பட்ட இச்சாதனம் Carbon Nanotubes என...
சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது அப்பதிப்பினை 24 கரட் தங்கத்தினால் ஆன கவருடன் அறிமுகம் செய்துள்ளது....