Friday, October 30, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home செய்திகள்

சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை தமிழக முதல்வர் விடுவிக்க வேண்டும்:

by admin
25/12/2012
in செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை தமிழக முதல்வர் விடுவிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி

 செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நெடுங்காலமாக சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல் துறையின் க்யூ பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் 7 பேர், தங்களை விடுவித்து ஈழத் தமிழ் ஏதிலிகள் வாழ்ந்துவரும் சாதாரண முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மீண்டும் சாகும்வரை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 ஐயத்தின் பேரிலும், ஈழத்திற்கு மண்ணெண்ணை, இரத்தம் கடத்தினார்கள் என்ற பெயரிலும் பல ஈழத் தமிழ் சொந்தங்கள் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் பிணைய விடுதலை பெற்ற நிலையிலும் விடுவிக்கப்படாமல் இருக்கும் இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி பல போராட்டங்களை நடத்திவிட்டது. அவர்களும் பல முறை இப்படி சாகும்வரை பட்டிணிப் போராட்டம் நடத்தி, அதனால் உடல் நிலை, மன நிலை பாதிக்கப்பட்டு அடைபட்டுக்கிடக்கின்றனர். அவ்வப்போது சிலரை விடுவித்தது தவிர, பெரும்பாலோர் இன்னமும் தனிமை சிறையில் தடுத்தே வைக்கப்பட்டுள்ளனர்.

அதன் எதிரொலியே இப்போது மீண்டும் பட்டிணிப் போராட்டம் நடந்து வருகிறது. இந்திய அரசு கையெழுத்திட்டு ஏற்ற உலகளாவிய மனித உரிமை பிரகடனத்திற்கும், மனிதாபிமானத்திற்கு எதிரான வகையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால் தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல், நமது ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு எதிரான தனது அராஜகமாக, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

சமீபத்தில் கூட, பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில், காவல் நிலையத்தில் பதிவு செய்துவிட்டு, கடந்த 2 ஆண்டுகளாக வெளியில் வாழ்ந்துவந்த 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது க்யூ பிரிவு. இலங்கையின் உளவுத் துறையுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படும் இந்திய உளவு அமைப்பின் (ஐ.பி) ஆலோசனையின் பேரிலேயே இவர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. இவை யாவும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளாகும். இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ள தமிழ்நாட்டில் ஏதிலிகளாக தஞ்சமடையும் நமது சொந்தங்களை, சிங்களத்திற்கு இணையாக சித்தரவதைக்கு உள்ளாக்குகிறது க்யூ பிரிவு. அவர்களிடமிருந்து பணத்தை பறிப்பது, நகைகளை பறிப்பது, பாலியல் உறவுக்கு அழைப்பது, இணங்க மறுத்தால் சிறப்பு முகாமில் தள்ளிவிடுவேன் என்று மிரட்டுவது என்று அதன் அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான, மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்துவிட்டது. தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் தமிழக முதல்வர், மற்றொரு பக்கத்தில் க்யூ பிரிவால் அவர்கள் வதைக்கப்படுவதை தடுத்த நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இதற்குப் பிறகாவது க்யூ பிரிவின் நடவடிக்கைகளை தமிழக முதல்வர் நடத்து நிறுத்த வேண்டும் என்று நாம்  தமிழர் கட்சி வேண்டுகோள் விடுகிறது. நமது வேண்டுகோள் செவிசாய்க்கபடவில்லையெனில் மீண்டும் போராட்டத்தில் குதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

செந்தமிழன் சீமான்,

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

 

Share this on WhatsApp
admin

admin

Related Posts

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

by சேரன்
23/09/2026
0

AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

by சேரன்
13/09/2026
0

கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கியப் பொறுப்பு ஈழத் தமிழர் விஜய் தனிகாசலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில்...

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

by சேரன்
31/08/2026
0

ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ நிகழ்வு வலுப்பெற்று வரும் நிலையில், அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக புதிய...

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

by சேரன்
30/08/2026
0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. புதிய விலைகள் ஆகஸ்ட் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன்படி, ஒக்டேன் 92...

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

by சேரன்
29/08/2026
0

யாழ்ப்பாணம் – மணற்காட்டுப் பகுதியில் நேற்று (28.08.2026) விஷமிகளால் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தீ, இன்று சனிக்கிழமை (29.08.2026) இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது....

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

by சேரன்
27/08/2026
0

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 1,300-க்கும் மேற்பட்டோர்...

Next Post

வட தமிழீழத்தில் இலங்கை அரசால் நிழல் யுத்தம் ஆரம்பம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.