Thursday, October 15, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home செய்திகள்

பயங்கரவாதி என்றால் யார்? சரியான விளக்கம் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றில் கூச்சல்

by admin
07/02/2013
in செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பயங்கரவாதி என்றால் யார்? வரைவிலக்கணம் கேட்டார் சுமந்திரன்:

தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர், இந்திய அரசால் தேடப்படுபவர் மற்றும் குற்றச் செயல்களுக்காக தேடப்படுபவர்களுக்கெல்லாம் அரசு சம்பளம் வழங்கும் நிலையில் பயங்கரவாதி என்றால் யார் என்பதற்கு வரைவிலக்கணம் அவசியமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது

ஒருவரின் கண்ணோட்டத்தில் பயங்கரவாதியாகத் தெரிபவர் இன்னொருவரின் பார்வையில் விடுதலை வீரராகத் தெரிவார். பாலஸ்தீனப் பேராட்டத்தை ஆதரிக்கும் நிலை இலங்கையர்களில் உள்ளது. எனவேதான் பயங்கரவாதி என்பதற்கு சரியான வரைவிலக்கணம் தேவை.

சர்வதேச ரீதியில் கூட பயங்கரவாத செயல்களுக்கு வரைவிலக்கணம் ஓரளவு உள்ள போதும் பயங்கரவாதி என்பதற்கு இல்லை எனத் தெரிவித்தார்.

பயங்கரவாதி என்றால் யார்? சரியான விளக்கம் கோரி எதிர்க்கட்சிகள் கூக்குரல் நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது:

இன்று பயங்கரவாதியாக இருப்பவர் நாளை போராட்ட வீரராக போற்றப்படலாம். எனவே பயங்கரவாதி என்பதற்கு சரியான வரைவிலக்கணம் அவசியம் என்று வலியுறுத்திய ஐ. தே. கயின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாட்டை தற்போது அரச பயங்கரவாதம் விழுங்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர் தொடர்ந்தும் குறிப்பிடுiகியல்.

பயங்கரவாதி யார் என்பதற்கு சரியான வரைவிலக்கணமின்றி கொண்டுவரப்படும் இச்சட்ட மூல திருத்தத்தை ஏற்க முடியாது. யசீர் அரபாத் முதலில் பயங்கரவாதியாகத் திரிக்கப்பட்டார். ஆனால் பின்னர் அவர் போராட்ட வீரராக வரலாற்றில் பதியப்பட்டார். எனவே பயங்கரவாதி என்பதற்கு சரியான வரைவிலக்கணம் அவசியம்.

இன்று இலங்கைக்குள் பாரிய பிரச்சினை அரச பயங்கரவாதம். இதனால் இன்று நாடு விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டுடன் புலிகளுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. ஆனாலும், அதன் பின்னரும் ஆட்கள் காணாமல் போகின்றார்கள்.

கொலை செய்யப்படுகின்றார்கள். வெள்ளைவான்கன் திரிகின்றன. பலர் ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர் இது அனைத்துக்கும் அரச பயங்கரவாதமே காரணம், எனவே அரச பயங்கரவாதத்திற்கே முதலில் முடிவு கட்ட வேண்டும்.

17 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட்டு 18 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது கூட ஒரு அரச பயங்கரவாதமே.

இந்த நாட்டை யார் வேண்டுமானாலும் வந்து பார்வையிட முடியுமென ஜனாதிபதி அழைப்பு விடுக்கின்றார். அப்படி வர முற்பட்ட சர்வதேச சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நவநீதம் பிள்ளைக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. ஐ. நா. விசேட குழுவினருக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. இது அரசின் இரட்டை நிலைப்பாடு. சொல்வது ஒன்று, செய்வது ஒன்று.

இந்த நாட்டில் தொலைபேசி மூலம் அச்சுறுத்தப்படாத ஒரு நிறுவனமாக நீதிமன்றம் மட்டுமே இருந்தது. ஆனால், இன்று நிறைவேற்று அதிகாரத்தின் விருப்பத்துக்கு அமைய தீர்ப்புகளை வழங்கும் நிறுவனமாக அது மாற்றப்பட்டு விட்டது. இந்த நாட்டில் தற்போது அரச பயங்கரவாதம் உள்ளது. அதுதான் உண்மை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர், இந்திய அரசால் தேடப்படுபவர் மற்றும் குற்றச் செயல்களுக்காக தேடப்படுபவர்களுக்கெல்லாம் அரசு சம்பளம் வழங்கும் நிலையில் பயங்கரவாதி என்றால் யார் என்பதற்கு வரைவிலக்கணம் அவசியமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதிகளுக்கான நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

குறித்த விவாதத்தில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.

ஒருவரின் கண்ணோட்டத்தில் பயங்கரவாதியாகத் தெரிபவர் இன்னொருவரின் பார்வையில் விடுதலை வீரராகத் தெரிவார். பாலஸ்தீனப் பேராட்டத்தை ஆதரிக்கும் நிலை இலங்கையர்களில் உள்ளது. எனவேதான் பயங்கரவாதி என்பதற்கு சரியான வரைவிலக்கணம் தேவை.

சர்வதேச ரீதியில் கூட பயங்கரவாத செயல்களுக்கு வரைவிலக்கணம் ஓரளவு உள்ள போதும் பயங்கரவாதி என்பதற்கு இல்லை எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

Share News:

Share this on WhatsApp
admin

admin

Related Posts

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை

by சேரன்
23/09/2026
0

AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

கனடாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியப் பொறுப்பில் ஈழத் தமிழர் விஜய் தனிகாசலம்

by சேரன்
13/09/2026
0

கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கியப் பொறுப்பு ஈழத் தமிழர் விஜய் தனிகாசலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில்...

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

இலங்கைக்கு எச்சரிக்கை: வலுப்பெறும் எல் நினோ – 2026 இறுதியில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

by சேரன்
31/08/2026
0

ஆசிய–பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ நிகழ்வு வலுப்பெற்று வரும் நிலையில், அதிக மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காலநிலை அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக புதிய...

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

CPC எரிபொருள் விலை திருத்தம்: பெட்ரோல் விலை குறைப்பு

by சேரன்
30/08/2026
0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. புதிய விலைகள் ஆகஸ்ட் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதன்படி, ஒக்டேன் 92...

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

யாழ். மணற்காடு சவுக்கம் காட்டில் இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத தீப் பரவல்: களமிறங்கியது ஹெலிகொப்டர்!

by சேரன்
29/08/2026
0

யாழ்ப்பாணம் – மணற்காட்டுப் பகுதியில் நேற்று (28.08.2026) விஷமிகளால் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தீ, இன்று சனிக்கிழமை (29.08.2026) இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது....

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

by சேரன்
27/08/2026
0

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 1,300-க்கும் மேற்பட்டோர்...

Next Post
மஹிந்த ராஜபக்‌ஷ வருகையை கண்டித்து திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டம்! 50 பேர் கைது!

மஹிந்த ராஜபக்‌ஷ வருகையை கண்டித்து திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டம்! 50 பேர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

02/10/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.