கற்கோவளம் உதயதாரகை விளையாட்டு கழகம் நடாத்தும் 2018 ம் ஆண்டிற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதலாவது போட்டியில் மணற்காடு சென் அன்ரனிஸ் B வி.கழகம் எதிர் வல்வை வி.கழகம் மோதி 02:01 என்ற கோல் கணக்கில் வல்வை அணி வெற்றி பெற்றது.
முதலாவது கோலினை வல்வை வி.கழக உதைபந்தாட்ட வீரன் ரசிகரன் வழங்கியிருந்தார்.
இரண்டாவது கோலினை வல்வை வி.கழக உதைபந்தாட்ட வீரன் பிரசாந் வழங்கியிருந்தார்.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக வல்வை வி.கழக உதைபந்தாட்ட வீரன் தர்சன் தெரிவுசெய்யப்பட்டார்.










