வல்வை செய்திகள்

வல்வெட்டிதுறை, இலங்கை வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெறுமதிமிக்க சேவையை வழங்கியிருந்தது.

வல்வெட்டிதுறை, உடுப்பிட்டி வாழ் இலங்கை வங்கி வாடிக்கையாளர்களே!
தொடரும் ஊரடங்கு மற்றும் அசாதாரண சூழ்நிலையால் உங்கள் அவசர பணத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வங்கிகளுக்கு செல்லமுடியாது அவதியுறுகின்றவர்களின் வேண்டுகைக்கு அமைவாக

(வெள்ளிக்கிழமை) 17.04.2020 (காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 3.00 மணி வரை) இலங்கை வங்கியின் நடமாடும் சேவையினை வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி பிரதேசத்தில் வாடிக்கையாளர்களுக்கு சேவை நடைபெற்றது.

இச்சேவை இடம்பெற்ற நேர ஒழுங்கு பின்வருமாறு:
9.00 மு.ப – 10.30 மு.ப வரை வல்வை முத்துமாரியம்மன் கோவிலடி.

10.45 மு.ப – 12.00 பி.ப வரை உடுப்பிட்டி சந்தி.

12.00 பி.ப – 1.00 பி.ப வரை இலந்தைக்காடு உடுப்பிட்டி.

1.30 பி.ப – 3.00 பி.ப வரை நெடியகாடு பிள்ளையார் கோவிலடி, வல்வெட்டித்துறை.

ஆகிய இடங்களின் சமூக இடவெளியினை கருத்தில் கொண்டு சிறப்பான சேவை வழங்கப்பட்டது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *