வல்வை உதை-இன்றைய ஆட்டத்தில் பாடுமீன் விளையாட்டுக்கம் 06.00 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது 27.02.2020
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
முதல் நான்கு பரிசில்களும் 7,00,000.00 ரூபா (ஏழு இலட்சம்) பெறுமதியானது.இது வடமாகாணத்தில் முதல் தடவையாக வழங்கப்படும் மாபெரும் பரிசில் தொகையாகும்.
வல்வை விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் முதலாவது போட்டியில் ஆனைக்கோட்டை யூனியன்
எதிர் ஜெயந்தி நகர் (கிளி)
அணி வருகை தராமையினால் ஆனைக்கோட்டை யூனியன் வெற்றி வழங்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு தெரிவானது.
இன்றைய இரண்டாவது ஆட்டம்
5 மணிக்கு பாடுமீன் எதிர் பூநகரி இளந்தளிர் மோதியது
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் இவ்விருவிளையாட்டுக்கழகம் 06:00என்ற கோல்கணக்கில் பாடுமீன் அணியானது வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது.
ஆட்ட நாயகனாக பாடுமீன் கெயின்ஸ்
தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.