வட-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மாபெரும் கர்த்தால் மாபெரும் ஊர்வலத்தில் 1500க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
வட்டுவாகலில் தொடங்கிய மாபெரும் பேரணியானது முல்லைத்தீவு நீதிமன்றம் ஊடாக முல்லைத்தீவு கச்சேரியை சென்றடைந்து அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர்கள் மக்கள் அரசியல் பிரமுகர்கள் பொது அமைப்புக்கள் சிவில் அமைப்புகள் ஊடகங்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளார்கள்.
இதில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் பொதுப் பிரகடனத்துடன் ஊர்வலம் நிறைவு பெற்றுள்ளது.






















































































































