இருப்பவர்கள் இருந்தால் இவ்வாறு நடக்குமா?” என்றொரு வாசகத்தைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்களின் படமொன்றை இங்கே பரவலாகக் காணக்கூடியதாயிருந்தது. இதனூடாக ஒன்றை நினைத்துப் பெருமிதமடைகிறேன். எங்கே எங்கள் அடுத்தடுத்த தலைமுறை அவர்களை மறந்துவிடுமோ அல்லது திரிபுபட்ட புரிந்துணர்வைப்பெற்றுவிடுமோ என்ற ஏக்கமொன்று 2009இன் பின் இன்றுவரை இருந்தது. ஆனால் அவர்களைப்பற்றி பிஞ்சுகளே பேசுமளவிற்கு வைத்துவிட்டாள் வித்தியா. சரித்திரத்தில் தமிழ்ச்சாதி என்றும் உன்னை மறக்காதடி எங்கள் செல்வமே.
இதே உணர்வோடு நண்பரொருவரின் வரிகளையும் இங்கே தருகிறேன்,
“தலைவா நீ ஏந்திய ஆயுதம்
பகைவர்க்கு கூர்மை-அதுவே
எங்களுக்குச் சீர்மை!”