Search

பூரணம் முதியோர் கொடுப்பனவு தற்போது கணபதி படிப்பகத்தினூடாக மேற்கொள்ளப்படுகின்றது

வல்வை ஒன்றியம் – வல்வெட்டித்துறை ஊடாக திரு. இளையதம்பி தெய்வேந்திரன் (குட்டி அண்ணா- இங்கிலாந்து) அவர்களால் பூரணம் முதியோர் உதவித்திட்டம் என்ற முதியோர் நலவாழ்வுத்திட்டம் 19.07.2010 அன்று வல்வெட்டித்துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அன்றிலிருந்து கடந்த மாதம் (ஆவணி- 2015) வரை 30 முதியவர்களிற்கு மாதாந்தம் தலா ரூபா.1000 உம், அம்முதியவர்களில் எவரிற்கேனும் மரணம் சம்பவித்தால் மரணசகாய நிதியாக ரூபா 10000 உம் திரு.தெய்வேந்திரன் வதனி குடும்பத்தினரால் வழங்கப்பட்டு வந்துள்ளது.

தற்போது இவ் உதவித்திட்டமானது வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் ஊடாக (புரட்டாதி மாதத்திலிருந்து) திரு.தெய்வேந்திரன் வதனி குடும்பத்தினரின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகின்றது. அதன் பொருட்டு இன்று கணபதி படிப்பக நிர்வாக சபையின் ஏற்பாட்டில் கணபதி பாலர் பாடசாலையில் உதவித்திட்டம் பெறும் முதியர்களின் ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றதுடன் அவர்களுக்கான புரட்டாதி மாதக் கொடுப்பனவும் வழங்கப்பட்டது. மேலும் தொடர்ந்து மாதந்தோறும் 21 ஆம் திகதியில் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது.

ஜந்து வருடங்களாக இவ் உதவித்திட்டத்திற்கான பணத்தினை வழங்கிவரும் திரு.தெய்வேந்திரன் வதனி குடும்பத்தினரிற்கு எமது வாழ்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

19.07.2010 அன்று உதவித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது

2012 இல் நடைபெற்ற முதியோர் கௌரவிப்பு நிகழ்வின் போது

 

 

இன்று கணபதி பாலர் பாடசாலையில் நடைபெற்ற ஒன்றுகூடலின் போது.

 

 

 

 

 

 

 

 

திரு. திருமதி. தெய்வேந்திரன் வதனி குடும்பத்தினர்




Leave a Reply

Your email address will not be published.