வல்வை செய்திகள்

ப.ஐக்கியத்தின் கபடிப்போட்டியில் 10.07.2017 ஆட்ட நாயகனாக வல்வை வீரர் P.பிறேம்ராஜ் தெரிவுசெய்யப்பட்டார்

பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் நடாத்தும் வடமராட்சி கபடிச் சங்கத்தின் அனுமதியுடன் “”அமரர் ம.சூரியகுமாரன்”” அவர்கள் ஞாபகார்த்த 20வயதுக்கு உட்பட்டோர்கான யாழ்மாவட்ட ரீதியிலான கழகங்களுக்கு இடையிலான மாபெரும் கபடிச்சுற்றுப்போட்டியின் 10.07.2017 பி.ப 8.30க்கு நேற்றைய ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்கொண்ட பருத்தித்துறை ஐக்கியம் கபடி அணி விளையாடியது..
போட்டியில் ஐக்கியம் பலம்வாய்ந்த அனுபவ வீரர்களை கொண்டதாக காணப்பட்டது…ஆனால் வல்வை முழுமையாக புதிய வீரர்களை கொண்டவர்களாகவும் கபடி விளையாட்டில் வளர்ந்து வரும் அணியாகவும் காணப்பட்டது….
போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பு குறைவாக காணப்பட்டது.தொடக்கத்தில் ஐக்கியம் அணியை நிலைகுலைய வைத்த வல்வை புள்ளிகளை பெறத்தொடங்கியது.. தொடர்ந்து வல்வை பக்கமே புள்ளிகள் அதிகரித்தன.. வல்வையில் புதிய வீரர்களாக காணப்பட்டாலும் திறமையான தமது ஆளுமைகளை வெளிப்படுத்தினர்… அதன் பின்னர் கள விகுவங்களை மாற்றிய ஐக்கியம் புள்ளிகளை பெற தொடங்கியது.. இறுதிகட்டத்தில் போட்டி விறுப்விறுப்பாக காணப்பட்டாலும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்த போட்டியாகவும் காணப்பட்டது…
தொடர்ந்து போட்டி இறுதிகட்டத்தை அடைய 106:65என்ற புள்ளியடிப்படையில் ஐக்கியம் வெற்றிபெற்று லீக் சுற்றில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது..
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக வல்வை வீரர் தெரிவுசெய்யப்பட்டார். இவருக்கான பதக்கத்தை எமது யாழ்மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் மதிப்புக்குரிய முகுந்தன் அவர்கள் வழங்கி கெளரவித்தார்… போட்டியில் கடமையாற்றிய வடமராட்சி கபடி சங்க நடுவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *