வல்வை சைனிங்ஸ் வைரவிழா வலைப்பந்தாட்டதில் உதயசூரியன், வெற்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றது
வல்வை சைனிங்ஸ் வி.கழகம் வைரவிழாவை முன்னிட்டு நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்டம் தொடர் நடைபெற்று வருகின்றது.
றெயின்போ அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது உதயசூரியன் விளையாட்டுக்கழகம்
இன்று இடம் பெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் உதயசூரியன் எதிர் றெயின்போ மோதின.
போட்டியின் ஆரம்பத்தில் இருந்து உதயசூரியன் விளையாட்டுக்கழகம் தனது ஆளுமையை வெளிப்படுத்தியது.போட்டி முடிவில் உதயசூரியன் 14.3 என்ற கோல் கணக்கில் உதயசூரியன் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது
சிறந்த விளையாட்டு வீராங்கனையாக உதயசூரியன் விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த றோகினி தெரிவு செய்யப்பட்டார்.
இறுதியில் வல்வை சைனிங்ஸ் வி.கழக வலைப்பந்தாட்ட மகளீர் அணியிர் காட்சி போட்டியாக விளையாடினார்கள் அவர்களையும் படங்களில் காணலாம்









