இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கற்கை நிலையம் ஒன்று கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் வல்வை பழைய நகரசபை மண்டபத்தில் இயங்கி வருகிறது.
வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் இதற்கு அனுசரனை வழங்கிவருகின்றது.இந்த ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட தையல்கலை பயிற்சி நெறிக்கான செயல்முறைப்பரீட்சை கடந்த 28ம்திகதி நடைபெற்றது.
பரீட்சைக்கு 16 மாணவிகள் தோற்றியிருந்தனர்.குறித்த பரீட்சை வடமாகாணத்தில் ஐந்து நிலையங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது.வல்வை நிலைய பரீட்சையை மேற்பார்வையிட மட்டக்களப்பு கற்கைநெறி நிலையத்திலிருந்து ஆசிரியை ஒருவர் வந்திருந்தார். அதன் படங்களில் சிலவற்றை இங்கு காணலாம்.
பிந்திய செய்தி:மேற்படி பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவிகளும் NVQ level 4ல் சித்தியெய்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.NVQ level 4 ஆனது GCE A/L தரத்தில் 3 பாடங்களில் சித்தியெய்தியதற்கு இணையானது.
ஜீலை 2018காலப்பகுதிக்கான கற்கை நெறிகளான1.தையற்கலை2.ICT என்பன ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன.
அடுத்த புதிய பிரிவுகள் ஜனவரி 2019ல் ஆரம்ப மாகவுள்ளன.










